16701 மனதின் வடிவங்கள்.

சியாமளா யோகேஸ்வரன். திருக்கோணமலை: இலக்சுமி பிரசுராலயம், 91, பாரதி வீதி, 1வது பதிப்பு, பெப்ரவரி 2023. (மட்டக்களப்பு:  வணசிங்க அச்சகம், 496 A, திருமலை வீதி). 

214 பக்கம், விலை: ரூபா 950., அளவு: 20.5×14.5 சமீ., ISBN: 978-624-98245-3-9.

இலக்சுமி பிரசுராலயத்தின் மூன்றாவது வெளியீடாக இச் சிறுகதைத் தொகுப்பு நூல் வெளிவந்துள்ளது. தாய்மையும் ஒரு சுமையே, அதையும் தாண்டிப் புனிதமானது, அந்த ஒரு நொடி, காவல்கார ரோமியோக்கள், மனங்களில் காமாலை, நியாயங்கள் நிலையானவை, போதையெனும் புதைகுழி, மதமொன்றும் சிறையில்லை, மனங்களின் வடிவங்கள், மனிதன் நினைப்பதுண்டு, வரமொன்று தாராயோ, தீ மட்டும் சுடுவதில்லை ஆகிய தலைப்புகளில் எழுதப்பட்ட ஆசிரியரின் பன்னிரு கதைகள் இதில் இடம்பெற்றுள்ளன. அவுஸ்திரேலியாவில் புலம்பெயர்ந்து வாழும் சியாமளா யோகேஸ்வரன், மனித மனங்களின் காலவோட்டத்தினூடான மாற்றங்களையும் சீரழிவுகளையும் தெளிவாகவும் மிக மிக நுட்பமாகவும் தன் எழுத்துக்களினால் படம்பிடித்துத் தந்துள்ளார். பேராதனைப் பல்கலைக்கழகப் பட்டதாரியான சியாமளா லக்டலிஸ் அவுஸ்திரேலியா என்ற பன்னாட்டு நிறுவனத்தில் பணியாற்றி வருகின்றார். இதயராகம், கானல் நீர் ஆகிய நாவல்களையும் உறவுகள் என்ற சிறுகதைத் தொகுப்பையும் ஏற்கெனவே இவர் எழுதியுள்ளார்.

ஏனைய பதிவுகள்