தமிழ் நேசன் அடிகளார் (இயற்பெயர்: பாவிலு கிறிஸ்து நேசரட்ணம்). யாழ்ப்பாணம்: பண்பாட்டலுவல்கள் திணைக்களம், கல்வி, பண்பாட்டலுவல்கள், விளையாட்டுத்துறை மற்றும் இளைஞர் விவகார அமைச்சு, வடக்கு மாகாணம், 2வது பதிப்பு, 2021, 1வது பதிப்பு, 1994. (யாழ்ப்பாணம்: அன்ரா பிரின்டர்ஸ், 379 கஸ்தூரியார் வீதி).
xlvi, 505 பக்கம், விலை: குறிப்பிடப்படவில்லை, அளவு: 21×14.5 சமீ., ISBN: 978-624-5911-16-5.
புலவர்கள், கலைஞர்கள் ஆகிய இரு பிரிவுகளின் கீழ் இந்நூலில் மன்னார் மாதோட்டப் பிரதேசத்தில் வாழ்ந்து மறைந்தவர்களும், இன்றும் வாழ்ந்துகொண்டிருப்பவர்களுமான ஐம்பது புலவர்களினதும், கலைஞர்களினதும் வாழ்வும் பணிகளும் பற்றிய கட்டுரைகள் இந்நூலில் ஆவணப்படுத்தப்பட்டுள்ளன. “புலவர்கள்” என்ற பிரிவில் முதலில் 19ஆம் நூற்றாண்டில் பள்ளிமுனையில் வாழ்ந்த புலவர் லோப்பர் றோச் பற்றிய கட்டுரையும், அதனைத் தொடர்ந்து அந்தோனி செபஸ்தியான், கிறிஸ்தோப்பு மரியாம்பிள்ளை, மீரா முஹைதீன் ஆலிம், அந்தோனி கபிரியேற்பிள்ளை, கபிரியேற்பிள்ளை மரிசால்பிள்ளை, கயித்தான் இசக்கியேல் மொத்தம், முகம்மது காசிம் ஆலிம், சமியேல் பிரகாசம், அவுறான் செபஸ்தியான் குரூஸ், சுவாம்பிள்ளை சந்தியாப்பிள்ளை, விசுவாசம் சந்தியோகு, பிலிப்பு அந்தோனி சக்கரவர்த்தி, சந்தான் பாவிலு, செபமாலை மொத்தம் போல், அந்தோனி செபமாலை குரூஸ், மரிசால் லோரன்ஸ் மொத்தம், முகம்மது அப்துல் ரகுமான், அந்தோனி சீமான், சேசு மொத்தம் பிரான்சிஸ், சந்தான் ஆரோக்கியம் சில்வா, கபிரியேல் இம்மானுவேல், பிரகாசம் சந்தியோகு, சவிரி சீமான்பிள்ளை, அருளானந்தம் செபமாலை, செபமாலை பிலிப்பு சிங்கராஜா ஆகிய 25 புலவர்கள் பற்றிய வரலாற்றுத் தகவல்களும் இடம்பெற்றுள்ளன. கலைஞர்கள் என்ற பிரிவில் அக்காஸ் லூயிஸ் குரூஸ், தொபியாஸ் மக்சிமஸ் லெம்பேட், அம்பலவாணர் செல்லத்துரை, பிரான்சிஸ் சவேரியான் லெம்பேட், அபியாஸ் அதிரியான் சோசை, சந்தியா அந்தோனி மிராண்டா, சீமான்பிள்ளை இம்மானுவல், செபஸ்தியான் செபமாலை, அடைக்கலம் அந்தோனிமுத்து, லூயிஸ் கிறிஸ்தோப்பர் லெம்பேட், பேதுருப்பிள்ளை அந்தானிப்பிள்ளை, கலைவாதி கலீல், இராஜம் புஷ்பவனம், தம்பிப்பிள்ளை பறுநாந்து பீரிஸ், பெரியசாமி முத்துக்கறுப்பன், மருசலீன் சூசைநாயகம் (நாவண்ணன்), செபஸ்தியான் மாசிலாமணி, டொனால்ட் தேவதாசன் அல்மேடா, சீமான் பத்திநாதன் பெர்ணாண்டோ, சந்தான் ஞானசீலன், சவிரியான் பற்றிக் லெம்பேட், சந்தாம்பிள்ளை கோமேதகம், பிலிப்புப்பிள்ளை விமலநாதன், எஸ்.ஏ.உதயன் ஆகிய 24 கலைஞர்கள், எழுத்தாளர்கள் பற்றிய தகவல்கள் இடம்பெற்றுள்ளன.