16920 ஓர் ஒப்பனை இல்லாத முகம்.

ஏ.ரகுநாதன் (மூலம்), எஸ்.கே.காசிலிங்கம் (தொகுப்பாசிரியர்). கொழும்பு 11: பூபாலசிங்கம் பதிப்பகம், 340, செட்டியார் தெரு, 1வது பதிப்பு, 2022. (யாழ்ப்பாணம்: ஜே.ஆர். இன்டஸ்ட்ரீஸ், இல. 7, உடுவில் மகளிர் கல்லூரி மேற்குத் தெரு, உடுவில்).

234 பக்கம், புகைப்படங்கள், விலை: ரூபா 500., அளவு: 20.5×14.5 சமீ., ISBN: 978-624-6077-01-3.

ஈழத்துக் கலைவானில் ஆறு தசாப்தங்கள் பயணித்துவந்த “நிர்மலா” ஏ.ரகுநாதன் தான் வாழும் காலத்தில் தமிழன் பத்திரிகையில் தொடராக எழுதியிருந்த “ஓர் ஒப்பனை இல்லாத முகம்” என்ற சுயசரிதைத் தொடரை பிரதானமாகக் கொண்டு தயாரிக்கப்பட்டுள்ள இந்நூல், அமரர் ரகுநாதன் அவர்கள் தொடர்பான மேலதிக தகவல்களும் தொகுக்கப்பெற்று அவரது வாழ்வும் கலைப் பணியும் பற்றிய ஒரு நினைவு ஆவணமாக வெளியிடப்பட்டுள்ளது. அமரர் ஏ.ரகுநாதன் அவர்களின் வாழ்வையும் அவர் ஆற்றிய பணிகளையும் தம்முடனான மனிதநேய உறவுகள் பற்றியும் சக கலைஞர்களும் ஊடகவியலாளர்களுமான ஏ.சீ.தாசீசியஸ், பி.எச்.அப்துல் ஹமீட், சி.மௌனகுரு, க.பாலேந்திரா, எஸ்.எஸ்.குகநாதன், கலைஞர் பரா, ஸ்ரீதரசிங் பூபாலசிங்கம், பொன்ராசா அன்ரன், நாச்சிமார் கோவிலடி இராஜன், உடுவை தில்லை நடராஜா, கி.செ.துரை, வி.ரி.இளங்கோவன், எம்.என்.சிவராம், கலாபுவன், இரா.குணபாலன், சலனம் முகுந்தன், எம்.பி.பரமேஸ், ரதி ருத்திரா, குணபதி கந்தசாமி, கதி செல்வகுமார், விக்ரர், ஈழன் இளங்கோ, மனோ, குணா ஆறுமுகராஜா, பிரபாலினி பிரபாகரன், எம்.பாஸ்கி, முருகபூபதி, துருபன் சிவசுப்ரமணியம், தி.சாம்சன், தம்பையா தயாநிதி, எஸ்.கே.ராஜென், எஸ்.கே.காசிலிங்கம் ஆகியோர் தமது மனப்பதிவுகளாகவே இடம்பெறச் செய்துள்ளனர். நூலின் இறுதிப்பகுதியில் 157-235 ஆம் பக்கங்களில்; “ஓர் ஒப்பனை இல்லாத முகம்“ என்ற சுயசரிதை 25 அத்தியாயங்களில் இடம்பெற்றுள்ளது.

ஏனைய பதிவுகள்

Mega Jackpot Efficiency Today

Blogs Bonus Game What the results are To your Unclaimed Prize Money? Jackpot King Harbors D Summer Sportpesa Megajackpot Pro Predictions Analogy & Methods for