16952 இலங்கையில் இரு மொழிகள். இளங்கீரன்.

சென்னை 17: லக்ஷ்மி பதிப்பகம், தியாகராய நகர், 1வது பதிப்பு, 1950. (சென்னை 1: சுதந்திரா அச்சகம்).

viii, 72 பக்கம், விலை: இந்திய ரூபா 1.25, அளவு: 18×12சமீ.

மொழி பிறந்த கதை, மொழியின் முக்கியத்துவம், தமிழ் மொழி, சிங்கள மொழி, இலங்கையின் இரு மொழிகள், தனிச்சிங்களச் சட்டமும் சம அந்தஸ்தும், எந்தப் பாதை? ஆகிய அத்தியாயங்களில் எழுதப்பட்டுள்ள நூல். இந்நூலின் நோக்கம், அரசியல் மொழி சம்பந்தமாக ஏற்பட்டுள்ள பிரச்சினையை மட்டும் ஆராய்ந்து, இதற்குத் தீர்வு காண முயல்வதாகும். சுபைர் இளங்கீரன் (04.01.1927- 12.09.1996) யாழ்ப்பாணத்தைச் சேர்ந்த இவர் 1948 இல் எழுத்துலகில் பிரவேசித்தவர். சிறுகதை ஆசிரியர், நாடகாசிரியர், திறனாய்வாளர் எனப் பல முகங்களைக் கொண்டவர். மலேசியாவில் தினமணிப் பத்திரிகைக்கு ஆசிரியராக இருந்த இவர் பின்னர் இலங்கையில் தொழிலாளி, ஜனவேகம் ஆகிய அரசியல் ஏடுகளின் பிரதம ஆசிரியராகவும் பணியாற்றியுள்ளார். இவர் 1960களின் முற்பகுதிகளில் இலங்கையில் மரகதம் என்னும் கலை இலக்கியச் சஞ்சிகையை வெளியிட்டார். இலங்கை முற்போக்கு எழுத்தாளர் சங்கத்தை ஸ்தாபித்தவர்களில் இவரும் ஒருவராவார். இவரது திறமைக்காக 1992 இல் முஸ்லிம் சமய கலாச்சார ராஜாங்க அமைச்சினால் விருதும், ”தாஜீல் அதீப்” என்ற பட்டமும் வழங்கிக் கௌரவிக்கப்பட்டார்.

ஏனைய பதிவுகள்

14322 இலங்கையில் ஐக்கிய நாடுகள்.

ஐக்கிய நாடுகள் தகவல் நிலையம். கொழும்பு: ஐக்கிய நாடுகள் தகவல் நிலையம், 1வது பதிப்பு, ஓகஸ்ட் 1995. (கொழும்பு 8: அரசாங்க அச்சுத் திணைக்களம், 118, பேஸ்லைன் வீதி). (12), 56 பக்கம், புகைப்படங்கள்,

Blackjack En Ligne Gratuit

Content Blackjack Gratuit: online all american poker 5 hand sites uk Blackjack V Slovenských Online Kasínach Are Live Dealer Blackjack Games Fair? Games: 24 7