9974 முஸ்லீம்களின் மத்தியில் குடிவழி முறை.

எஸ்.அப்துல் றாஸீக்.சம்மாந்துறை: சம்மாந்துறை குடிமரைக்காயர் சம்மேளனம், 1வது பதிப்பு, நவம்பர் 2012. (சம்மாந்துறை: ரோஸ் பிரின்டர்ஸ், 20, செலான் வங்கி வீதி).

xvii, 135 பக்கம், விலை: ரூபா 300., அளவு: 20.5×14.5 சமீ., ISBN: 978-955-54813-0-4.

1949இல் எடுக்கப்பட்ட சம்மாந்துறை பெரிய பள்ளியாசலின் தோற்றத்தை முன்னட்டையில் தாங்கி வெளிவந்துள்ள சமூக வரலாற்று ஆய்வு. முஸ்லிம்கள் மத்தியில் குடிவழி முறை: தோற்றமும் தொடர்ச்சியும், பள்ளிவாசல்கள் உதயம், குடிவழி மரைக்கார் சபைகள், கணக்கன் கத்தர குடி, மாமனாபோடி குடி, தேன்முதலி குடி,  பெரிய வெள்ளரசன் குடி, சின்ன வெள்ளரசன் குடி, சங்கதி குடி, இராசாம்புள்ள குடி, சுல்தான்புள்ள குடி, கோசப்பா குடி, சேனைக்குடி, பெரிய படையான்குடி, பெரிய படையாண்ட குடி, ஆதம்பட்டாணி குடி ஆகிய தலைப்புகளில் இவ்வாய்வு மேற்கொள்ளப்பட்டுள்ளது. 1960இல் ஆசிரியர் நியமனம்பெற்று பின்னாளில் அதிபராகப் பணியாற்றி ஓய்வுபெற்றவர் கலாபூஷணம் எஸ்.அப்துல் றாசிக். இவர் சம்மாந்துறை கலை இலக்கிய வரலாற்றின் நிறுவனமயப்படுத்தப்பட்ட கலாபிவிருத்திக் கழகத்தின் ஆலோசகராகவும், மஜ்லிஸ் அஷ்ஷ{ராவின் செயலாளர் நாயகமாகவும் கடமையாற்றியவர். தற்போது சம்மாந்துறைப்பிரதேச மத்தியஸ்த சபையின் தவிசாளராகப் பணியாற்றுகிறார். (இந்நூல் யாழ்ப்பாணப் பொது நூலகத்தில் பார்வையிடப்பட்டது.  சேர்க்கை இலக்கம் 236541).

ஏனைய பதிவுகள்

Sissling Hot Automaty Do Uciechy

Content Gry hazardowe Przez internet Dzięki Żywo Przy , którzy Odgrywać Po Jednoręki Bandyta Cytrusy Za darmo? Rozrywki Kasynowe Za darmo Hotspot Najlepsze Bonusy Kasyno