15007 ஏன் என்று அறிவோமா?

கமலினி கதிர். சென்னை 600017: மணிமேகலைப் பிரசுரம், தபால் பெட்டி எண் 1447, இல.7, தணிகாசலம் சாலை, தியாகராய நகர், 1வது பதிப்பு, 2018. (சென்னை 600094: ஸ்கிரிப்ட் ஆஃப்செட்).

176 பக்கம், விளக்கப்படங்கள், விலை: இந்திய ரூபா 100.00, அளவு: 18×12  சமீ.

அம்மா திவ்யா, அப்பா சுந்தரேஸ், பிள்ளைகள் ஜீவன், சிந்துஜா, யுகி, ஆதித்யா என அன்பாலான ஒரு குடும்பத்தினரிடையே எழும் உரையாடல்களினூடாக ஏராளமான அறிவியல் புதினங்களை பதிவுசெய்துள்ளார். ஒவ்வொரு அத்தியாயத்திலும் பல்வேறு கேள்விகள்- அவற்றுக்கான  பொருத்தமான அறிவியல் தகவல்களைக் கூறுவதாயமையும் பதில்கள் என்று சுவாரஸ்யமான 27 உரையாடல் கட்டுரைகளினூடாக இந்நூல் நகர்கின்றது. சிறுவர் நிலையிலிருந்து கட்டிளம் பருவ நிலையை அடையும் எமது இளம் வாசகர்களுக்கான அறிவில் நூல்கள் இல்லாத குறையை இந்நூல் ஓரளவு நிவர்த்திசெய்கின்றது. ஒவ்வொரு உரையாடல் பகுதியையும் வாசித்து அதன் செய்திகளை உள்வாங்கித் தமது சிறார்களுக்கு மீளக்கொடுக்க விரும்பும் தீவிர சிந்தையுள்ள பெற்றோருக்கும் இந்நூலின் வருகை ஒரு வரப்பிரசாதமாகும். இந்நூலுக்கு அமெரிக்காவிலுள்ள (ஹவாய்) உலகத் தமிழ்ப் பல்கலைக்கழகம் (International Tamil University USA) 19.08.2018 அன்று The Enlightenment Award என்ற விருதினை வழங்கியிருந்தது.

ஏனைய பதிவுகள்