15233 புராதன இந்து சமுதாயத்தில் போரியல்.

ச.முகுந்தன். கொழும்பு 6: குமரன் புத்தக இல்லம், 39, 36ஆவது ஒழுங்கை, 1வது பதிப்பு, 2020. (கொழும்பு 6: குமரன் புத்தக இல்லம், 39, 36ஆவது ஒழுங்கை).

xii, 197 பக்கம், விலை: ரூபா 950., அளவு: 21×14.5 சமீ., ISBN: 978-955-659-688-5.

வேதகாலத்தில் போரியல், போர் வியூகங்கள், இந்து இலக்கிய மூலங்களில் விமானப் போரியல் பற்றிய விபரிப்புகள், ஆயுதங்கள், இராணுவப் பாசறை அமைப்பு முறை, புலனாய்வுப் பொறிமுறை, பழந்தமிழ் மக்களின் வாழ்வியலில் போரியல், வர்மக் கலை, புராதன இந்துப் போரியல் நெறியும் மனித உரிமைப் பிரகடனங்களும் ஆகிய ஒன்பது கட்டுரைகளின் வழியாக ஆசிரியர்  புராதன இந்து சமுதாயத்தில் பயின்று வந்துள்ள போரியல் நெறியின் சில முக்கிய பரிமாணங்களை எடுத்துக் கூறியுள்ளார். வேத சங்கிதைகள், இதிகாச புராணங்கள், அர்த்த சாஸ்திரம், மனுஸ்மிருதி முதலிய தர்ம சாஸ்திரங்கள், காமாண்டக நீதிசாரம், சுக்கிர நீதிசாரம், வசிட்ட தனுர்வேத சாஸ்திரம், வைமானிக சாஸ்திரம், யுக்திகல்பதரு, பழந்தமிழ் இலக்கியங்கள், சித்தர் பாடல்கள் என நீண்டு செல்லும் இலக்கிய மூலங்களிலிருந்தும், சாசனச் செய்திகளிலிருந்தும் அறிந்துணரப்பட்ட விடயங்களை பொருட் பொருத்தமுறத் தொகுத்துச் சுட்டியும், வகுத்துக்காட்டியும் இக்கட்டுரைகள் எழுதப்பட்டுள்ளன. கலாநிதி சயனொளிபவன் முகுந்தன், நல்லூர் கந்தர்மடத்தைச் சேர்ந்தவர். யாழ். இந்துக் கல்லூரியின் பழைய மாணவர். யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தில் இந்து நாகரிகத்தில் சிறப்புக் கலை பயின்று முதல் வகுப்பில் தேர்ச்சி பெற்றவர். பண்பாட்டியற் கற்கைகளில் முதுகலைமாணிப் பட்டத்தினையும் இந்து நாகரீகத்தில் முதுதத்துவமாணிப் பட்டத்தினையும் பெற்றவர். யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தில் இந்துநாகரிகத் துறைத் தலைவராகப் பணியாற்றுகின்றார்.

ஏனைய பதிவுகள்

Lost Gifts Gamble Now for the GamePix

Posts Access Undetectable Frescoes Online:Lost Treasures Khezuli will be there having one of several specialists just who turned up safely. Consult with Khezuli for an