மு.சிங்கராயர். பிரான்ஸ்: பாஷையூர் அபிவிருத்திக் குழு, 1வது பதிப்பு, நவம்பர் 2009. (யாழ்ப்பாணம்: புனிதவளன் கத்தோலிக்க அச்சகம்). (10), 148 பக்கம், விளக்கப்படங்கள், விலை: ரூபா 200., அளவு: 20.5×14.5 சமீ. ஈழத்தின் நாட்டுக்கூத்துப் பாரம்பரியக் கிராமங்களில் ஒன்றான யாழ்ப்பாணம்-பாஷையூரின் நாட்டுக்கூத்து வரலாற்றினை, கலைஞர்களின் வாழ்வினூடாக திரு. மு.சிங்கராயர் ஆவணப்படுத்தியுள்ளார். பாஷையூர் கூத்தின் தோற்றம், கோவில் திருவிழாவும் கூத்தும், சலித்தெடுத்த முத்துக்கள், பாஷையூர் தந்த பெரும் புலவர்கள், கூத்துக்களை ஆடும் மேடைக் கோலங்கள், அண்ணாவிமார்களும் அரங்குகளும், ஊர்களைக் கவர்ந்திழுக்கும் கூத்து, பங்களிப்பும் பணக்கூத்தும், ஆட்டக்கூத்து, மிருதங்கம் தபேலா வீணை தாளம், ஒலி ஒளி அமைப்புகள், கூத்தும் ஒப்பனையும், பக்கப்பாட்டு, 1920இற்குப் பின் கூத்து, 1945க்குப் பின்னர் பாஷையூர் அரங்கின் கூத்தாளிகள், நாட்டுக்கூத்தில் இளைய தலைமுறை, பாஷையூர் கூத்தின் எதிர்காலச் செல்நெறி, நிறைவுறை ஆகிய 18 இயல்களில் இந்நூல் எழுதப்பட்டுள்ளது. யாழ்ப்பாணம்-பாஷையூரைப் பிறப்பிடமாகக் கொண்ட ஓய்வுபெற்ற ஆசிரியர் முடியப்பு சிங்கராயர் எழுத்தாளரும், கவிஞரும் நாடக ஆசிரியருமாவார். தனது 20ஆவது வயதில் எழுத்துத் துறையில் நுழைந்த இவர் பன்னூலாசிரியருமாவார்.
Best Online casino Incentives & Sign
Posts Innovative Slot Games: how to play poker card game Faq’s Regarding the Gambling on line Progressive Slots Keep the banking information personal very only