க.தா.செல்வராஜகோபால் (புனைபெயர்: ஈழத்துப் பூராடனார்), எஸ்.பி.கனகசபாபதி (உதவி ஆசிரியர்). கனடா: ஜீவா பதிப்பகம், இல. 3, 1292 Sherwood Mills Blvd, Mississauga L5V1S6, Ontario, 1வது பதிப்பு, ஏப்ரல் 2005. (கனடா: ரீ கொப்பி, டொரன்டோ). xxxx, 224 பக்கம், விலை: கனேடிய டொலர் 10., அளவு: 21.5×14 சமீ. அமரர் வே.ஞானமுத்து அவர்களின் ஆய்வுகள், அடிச்சுவடுகளைப் படைத்தவர்கள், முதன்மைப் படைப்பாளியின் உரை, இணைப் படைப்பாளியின் உரை ஆகிய ஆரம்பத் தகவல்களுடன் தொடரும் இந்நூலின் ‘சுவடுகள்” என்ற பிரிவில், சுவட்டைப் பின்பற்ற ஒரு கைகாட்டி, மட்டக்களப்பு மாநிலத்தை நோக்கி ஒரு சுவடு, பண்டைய வரலாறு பற்றிய சுவடு, இடவாதாரச் சுவடுகள், சான்று ஆதார வரலாற்று நூற் சுவடு, மகாவம்சச் சுவடு, மூவிராச்சிய பகுப்பு அடிச்சுவடு, வடகீழ் பருவப் பெயர்ச்சிக் காற்று அடிச்சுவடு, மட்டக்களப்பு மான்மிய அடிச்சுவடு, இடப்பெயர்ச் சுவடு, அனுபந்தச் சுவடு ஆகிய தலைப்புகளின் கீழ் மட்டக்களப்பின் பண்டைய வரலாற்றுச் சுவடுகள் சுட்டிக்காட்டப்பட்டுள்ளன. இந்நூலின் அனுபந்தங்களாக, யாரிந்த வேடர், இலங்கை அரசர் பெயர் வரிசை, கொடுங்கடல் கொண்ட பன்மலை அடுக்கமும் பஃறுளி ஆறும் குமரிக்கோடும், இராஜாவலிய மன்னர்களின் பெயர் வரிசை, தம்பன்னையில் இருந்து புலம்பெயர்ந்த பூர்வீக மக்களின் இறை வழிபாடு, மட்டக்களப்பை அரசு செய்தவர் பெயரட்டவணை, மட்டக்களப்புத் தாயகத் தடயம், நிறைவு உரைச்சுவடு ஆகிய எட்டு ஆவணங்கள் இணைக்கப்பட்டுள்ளன. ஈழத்துப் பூராடனார் என அழைக்கப்படும் க. தா. செல்வராசகோபால் (13 டிசம்பர், 1928 – 21 டிசம்பர் 2010) ஈழத்துப் பன்முகத் தமிழறிஞர். இருநூற்று ஐம்பதுக்கும் மேற்பட்ட நூல்களை எழுதியும் பதிப்பித்தும் உள்ளார். (இந்நூல் மட்டக்களப்பு பொது நூலகத்தில் பார்வையிடப்பட்டது. சேர்க்கை இலக்கம் 3839).