15311 வெடியரசன் மற்றும் பண்டாரவன்னியன் நாட்டுக் கூத்துகள்.

மு.அருட்பிரகாசம். யாழ்ப்பாணம்: பண்பாட்டலுவல்கள் திணைக்களம், கல்வி, பண்பாட்டலுவல்கள், விளையாட்டுத்துறை மற்றும் இளைஞர் விவகார அமைச்சு, வடக்கு மாகாணம், செம்மணி வீதி, நல்லூர், 1வது பதிப்பு, 2020. (யாழ்ப்பாணம்: நியூ எவகிறீன் அச்சகம், இல. 693, காங்கேசன்துறை வீதி).

ix, 131 பக்கம், விலை: குறிப்பிடப்படவில்லை, அளவு: 20.5×14.5 சமீ., ISBN: 978-955-7331-27-0.

இலங்கைத் தமிழரிடையே பிரபல்யமாகியிருந்த இரண்டு பாரம்பரிய நாட்டுக் கூத்துக்களை மீள்பிரசுரமாக்கும் முயற்சியாக இந்நூல் வெளியிடப்பட்டுள்ளது. ‘வெடியரசன் நாட்டுக் கூத்து” இலங்கைத் தமிழரிடையே காணப்படும் ஒரு சமுதாயப் பிரிவினரான முற்குகரிடையே வழங்கி வரும் நாட்டார் பாடல்களை அடிப்படையாகக் கொண்டு அமைந்தது. “பண்டாரவன்னியன் நாட்டுக்கூத்து”, வெள்ளையர் காக்கை வன்னியனைத் தம் கைப்பொம்மையாக்கி, திறை கொடுக்க மறுத்த குற்றத்திற்காக பண்டாரவன்னியனைச் சிறைப்பிடிக்க முயல்கின்ற வேளை, மானமே பெரிதென நினைத்துப் போராடிய மன்னனின் வாழ்க்கை நாட்டுக்கூத்தாக நடிக்கப்பெற்று வந்துள்ளது. இந்நூல் இவ்விரு கூத்துக்களையும் ஒரே நூலாக மீள்பிரசுரம் செய்யும் நோக்கில் உருவாக்கப்பட்டுள்ளது. கூத்திசைப் பாவலன் முடியப்பு அருட்பிரகாசம் 07.10.1944இல் பாஷையூரில் பிறந்து தமது சிறுவயதில் இருந்தே நாட்டுக்கூத்துக் கலையில் ஆர்வமுடையவராகி 1952இல் ஞானசவுந்தரி நாட்டுக்கூத்தில் சேனாதிபதியாக நடித்தது முதல் கலையுலகில் கால்பதித்து பாைஷையூரின் புகழ்பெற்ற அண்ணாவிமார்களான வஸ்தியாம்பிள்ளை, பிலிப்பையா ஆகியோரிடம் நாட்டுக்கூத்தினைப் பயின்றவர்.

ஏனைய பதிவுகள்

Casino Akkvisisjon

Content Sammenlign De Beste Norske Casino Boomerang Casino Casino I tillegg til Free Spins Uten Almisse Innskuddsbonus Med det er nettopp dippedutt der free spins