சா.இ.கமலநாதன் (தொகுப்பாசிரியர்). மட்டக்களப்பு: சுவாமி விபுலாநந்தர் நூற்றாண்டு விழாச் சபை, 1வது பதிப்பு, மே 1992. (மட்டக்களப்பு: புனித வளனார் கத்தோலிக்க அச்சகம்). xix, 224 பக்கம், விலை: குறிப்பிடப்படவில்லை, அளவு: 24×18 சமீ. இம்மலரில் ஆசிச் செய்திகள், வாழ்த்துச் செய்திகள் என்பனவற்றைத் தொடர்ந்து விபுலாநந்தர் பதிகம் (அல்ஹாஜ் ஆ.மு.ஷரிபுத்தீன்), யாழ் நூல் ஓர் அறிமுகம் (இ.பாலசுந்தரம்), விபுலாநந்த அடிகளும் இசைத் தமிழும் (சி.பாலசுப்பிரமணியன்), ஸ்ரீமத் சுவாமி விபுலாநந்தர் பிறந்திலரேல் (வி.விசுவலிங்கம்), சுவாமி விபுலாநந்தரும் சம்ஸ்கிருதமும் (வி.சிவசாமி), சுவாமி விபுலாநந்தரும் தனித் தமிழும் (றூபி வலன்ரீனா பிரான்சிஸ்), சுடர் வீசும் சுயம்பு ஜோதி (க.நல்லரத்தினம்), சுவாமி விபுலாநந்தர் கட்டுரைகள் கவிதைகள் நூல்கள் (எப்.எக்ஸ்.சி. நடராசா), விபுலாநந்த அடிகளும் தமிழர் வரலாறும் (வி.சிவசாமி), கல்விச் சிகரக் கொடியானோன் (மு.சோமசுந்தரம்பிள்ளை), விபுலாநந்தர் கவிதைகள்: ஒரு கண்ணோட்டம் (செ.யோகராசா), தவத்திரு விபுலாநந்தரின் வெளிச்சத்தைப் பார்த்து (ஆரையூர் அமரன்), சுவாமி விபுலாநந்தரின் வித்துவமும் கவித்துவமும் (க.நல்லரெத்தினம்), 928 இலக்கிய அறிஞர்கள், புலவர்கள் நூல் தேட்டம் – தொகுதி 15 549 விபுலாநந்த அடிகள் நினைவஞ்சலி (செ.வேலாயுதபிள்ளை), விபுலாநந்த அடிகள் இயற்றிய ‘யாழ்நூல்” (பி.டி.செல்லத்துரை), மதங்க சூளாமணி ஒரு திறனாய்வு (பழனி அரங்கசாமி), சுவாமி விபுலாநந்தரின் ஆளுமையும் பெறுமானங்களும் (சி.தில்லைநாதன்), மட்டக்களப்பும் மட்டிலாத் துறவியும் (வெற்றிமகன்), சுவாமி விபுலாநந்தரின் கல்விச் சிந்தனைகள் (க.தியாகராசா), விபுலாநந்தரின் கல்வி முறை (க.கணபதிப்பிள்ளை), யாழ் நூல் தந்தவரும் யாழ்ப்பாணமும் (க.சி.குலரத்தினம்), சுவாமி விபுலாநந்தரின் சமூகப் பணிகள் (அன்புமணி இரா. நாகலிங்கம்), சுவாமி விபுலாநந்தரின் வரலாறும் ஆக்கங்களும் அவற்றின் பதிப்பு முயற்சிகளும் (சி–), எத்தனிப்பில் வெற்றி கொள்ள (திமிலைத்துமிலன்), விபுலாநந்த அடிகளாரும் சைவ சித்தாந்தமும் (ம.சிவநேசராசா), என் சிந்தையில் பதிந்தவை (வே.பஞ்சாட்சரம்), கிறிஸ்தவர்களுக்கும் சுவாமி விபுலாநந்தருக்குமிடையில் நிலவிய அன்னியோன்னிய தொடர்புகள் (வண.ஆர்.எஸ்.லோப்பு அடிகள்), இசைத் தமிழ் வளங்கண்ட அருட்டிரு விபுலாநந்த அடிகளார் (ஞானாம்பிகை குலேந்திரன்), பிறந்த மண்ணுக்குப் பெருமை சேர்த்தவர் (மாஸ்டர் சிவலிங்கம்), சுவாமி விபுலாநந்தர் நோக்கில் பாரதியார் (பெ.சு.மணி), சுவாமி விபுலாநந்தரின் இலக்கிய நோக்கு (வ.சிவசுப்பிரமணியம்), ளுறயஅi ஏipரடயயெனெய வுhந ளுயnnலையளin ளுயiவெ யனெ ளுஉhழடயச (ளு.யுஅpயடயஎயயெச)இ ஸ்ரீமத் சுவாமி விபுலாநந்தர் சில நினைவுகள் (ஆர். கந்தையா), புலவரைப் போற்றிய புலவன் (வே.கணபதிப்பிள்ளை), விபுலாநந்த அடிகளாரும் நவநீதகிருஷ்ண பாரதியாரும் (இரா.வை.கனகரத்தினம்), முத்தமிழ் வித்தகரும் கண்ணகி வழிபாடும் (கே.கார்த்திகேசு), சுவாமி விபுலாநந்தரின் வாழ்க்கை வரலாற்று நிகழ்ச்சிகள் (வ.சி), சுவாமி விபுலாநந்த அடிகளாரது தமிழ் உணர்வு பற்றிய ஓர் ஆய்வு (சி.மௌனகுரு), சுவாமி விபுலாநந்தரின் கல்வி நோக்கு (அ.சண்முகதாஸ்), ழுரச iகெயவெ னநியசவஅநவெ (ளு.ஆலடஎயபயயெஅ)இ ஐn pசயளைந ழக வாந னiஎiநெ யெஅந (ளுறயஅi ஏipரடயயெவொயச) ஆகிய ஆக்கங்கள் இடம்பெற்றுள்ளன. (இந் நூல் கொழும்புத் தமிழ்ச் சங்க நூலகத்தில் பார்வையிடப்பட்டது. சேர்க்கை இலக்கம் 12956).