து.துசியந்தன். கொழும்பு 6: குமரன் புத்தக இல்லம், 39, 36ஆவது ஒழுங்கை, 1வது பதிப்பு, 2021. (கொழும்பு 6: குமரன் புத்தக இல்லம், 39, 36ஆவது ஒழுங்கை).
x, 69 பக்கம், விலை: ரூபா 600., அளவு: 21.5×14.5 சமீ., ISBN: 978-955-659-732-5.
யாழ்ப்பாணத்துக் கோயில் ஓவியங்களின் வரலாற்றை 20ஆம் நூற்றாண்டின் பிற்பகுதியில் இருந்தே ஆரம்பிக்க வேண்டியுள்ளது. அதற்கு முந்திய ஓவியங்கள் யாவும் அழிந்து போய்விட்டன. போர்த்துக்கேயர், ஒல்லாந்தர் காலத்தில் யாழ்ப்பாணத்தில் புராதன இந்து ஆலயங்கள் அழிக்கப்பட்டமை ஓவியங்கள் அழிந்தமைக்கு ஒரு பிரதானமான காரணியாகும். இருப்பினும் ஒல்லாந்தர் ஆட்சியின் பிற்காலத்தில் மீள் உருவாக்கம் செய்யப்பட்ட கோயில்களில் வரையப்பட்ட பெரும்பான்மையான ஓவியங்களும் எம்மவர்களின் அக்கறையீனத்தால் அழிவடைந்துவிட்டன. இந்நிலையில் யாழ்ப்பாணத்தில் அழிந்துவிட்ட மற்றும் இன்றும் எஞ்சியிருக்கும் பின்வரும் கோயில்களின் ஓவியங்கள் இந்நூலில் நோக்கப்பட்டுள்ளன. மாவிட்டபுரம் கந்தசுவாமி கோயில், வண்ணார்பண்ணை சிவன் கோயில், நல்லூர் சட்டநாதர் கோயில், நல்லூர் கைலாசப்பிள்ளையார் கோயில், வல்வெட்டித்துறை முத்துமாரியம்மன் கோயில், உரும்பிராய் சொக்கநாதர் சிவன் கோயில், இணுவில் பரராஜசேகரப் பிள்ளையார் கோயில், நல்லூர் கந்தசுவாமி கோயில், திருநெல்வேலி சிவன் கோயில், திருநெல்வேலி அம்மன் கோயில், மேலும் கோயில் திரைச்சீலை ஓவியங்கள் பற்றியும் அவற்றுடன் சம்பந்தப்பட்ட ஓவியர்கள் பற்றியும் இந்நூல் பேசுகிறது. நூலாசிரியர் துரைசிங்கம் துசியந்தன் யாழ்ப்பாணக் கல்வி வலயத்தில் சித்திரப் பாடத்துறை ஆசிரிய ஆலோசகராகப் பணியாற்றுகின்றார். இவர் தனது இளங்கலைமாணிப் பட்டத்தினை யாழ்ப்பாணப் பல்கலைக் கழகத்திலும் கல்வியியல் முதுமாணிப் பட்டத்தினை தேசிய கல்வி நிறுவகத்திலும் பெற்றவர்.