14082 இந்து சமயம் தரம் 12: வளநூல்.

தேசிய கல்வி நிறுவகம். மஹரகம: சமயங்கள் மற்றும் விழுமியங்கள் கல்வித்துறை, மொழிகள் மானிடவியல் சமூக விஞ்ஞான பீடம், தேசிய கல்வி நிறுவகம், 1வது பதிப்பு, 2018. (மஹரகம: அச்சகப் பிரிவு, தேசிய கல்வி நிறுவகம்). x, 156 பக்கம், விலை: ரூபா 330., அளவு: 29×21 சமீ., ISBN: 978-955-654-732-0. 2018ஆம் ஆண்டில் இருந்து நடைமுறைப்படுத்தப்படும் பாடத்திட்டத்திற்கு அமைவாக முதன்முறையாக இவ்வளநூல் தயாரிக்கப்பட்டுள்ளது. மாணவரிடம் அபிவிருத்தி செய்யப்படவேண்டிய தேர்ச்சி மட்டங்கள் தொடர்பான கற்றற் பேறுகள், உத்தேச விடய உள்ளடக்க வழிகாட்டிகள், கற்றல்-கற்பித்தற் செயற்பாடுகள், உசாத்துணைகள் என்பவற்றை உள்ளடக்கியதாக இவ்வளநூல் அமைகின்றது. இந்து சமயம்-ஓர் அறிமுகம், தமிழகத்தின் இந்து சமயப் பண்பாடு, இந்து சமய நெறிகள், பக்தி மார்க்கங்களும் பக்தியாளர்களும் (சமயகுரவர்கள்), அனுபூதியும் சித்தர்களும், இந்துக் கோயிற் கலைகள்-ஓர் அறிமுகம், இந்துக் கலைகள், இலங்கையில் இந்து சமயம், இந்து சமய வளர்ச்சிக்குத் தொண்டாற்றிய பெரியார்கள், இந்து சமய வளர்ச்சியில் ஊடகங்களின் பங்களிப்புகள் ஆகிய பத்து இயல்களில் இவ்வளநூல் தயாரிக்கப்பட்டுள்ளது. (இந்நூல் கொழும்புத் தமிழ்ச் சங்க நூலகத்தில் பார்வையிடப்பட்டது. சேர்க்கை இலக்கம் 65678).

ஏனைய பதிவுகள்