இ.மகேந்திரன் (பதிப்பாசிரியர்). கொழும்பு: நூல் வெளியீட்டுக் குழு, கல்வி வெளியீட்டுத் திணைக்களம், இசுருபாயா, பத்தரமுல்ல, 1வது பதிப்பு 2016 (கொழும்பு: சென்வின் தனியார் நிறுவனம், இல. 35/3, கேரகல வீதி, ஹெலும்மஹர, தெல்கொட). xiiஇ 116 பக்கம், புகைப்படங்கள், சித்திரங்கள், விலை: ரூபா 140.00, அளவு:24×18 சமீ. இது கல்வி அமைச்சின் இந்து சமய ஆலோசனைச் சபையின் ஆலோசனைக்கமைய வெளியிடப்பட்டுள்ள பாடநூல். இந்நூல் வெளியீட்டுக் குழுவில் நந்தினி சண்முகலிங்கம், சி.ஞானசூரியம் ஆகியோரும் ஓவியராக ஆர்.கௌசிகனும் பணியாற்றியுள்ளனர். இந்நூலில் கடவுள், ஆலய வழிபாடு -1, சிவராத்திரி, நாள் மங்கலம், சம்பந்தர் தேவாரம், புது வருடப் பிறப்பு, கண்ணப்ப நாயனார், அப்பர் தேவாரம், விரதங்கள், ஆலய வழிபாடு -2, ஈழத்து ஆலயங்கள், உபநிடத சிந்தனைகள், சுந்தரர் தேவாரம், திருமுறைகளில் புராண இதிகாசக் கருத்துக்கள், சைவப் பெரியார் சிவபாதசுந்தரனார், மக்கள் சேவையே மகேசன் சேவை, திருவாசகம், விழுமியங்கள், சைவசித்தாந்தத்தில் பசு, திருவிசைப்பாதிருப்பல்லாண்டு, திருமந்திரம்-பெரியபுராணம்-திருப்புகழ், நாட்டார் வழிபாடு ஆகிய 22 பாடங்கள் இடம்பெற்றுள்ளன. பின்னிணைப்பாக எங்கள் நாட்டிலுள்ள சமயங்கள் என்ற கட்டுரைக் குறிப்பும் இடம்பெற்றுள்ளது.