14087 இரண்டாவது உலக இந்து மாநாடு சிறப்பு மலர்: மன்னார் மாவட்டம்.

மலர்க் குழு. மன்னார்: மாவட்ட விழாக் குழு, இரண்டாவது உலக இந்து மாநாடு-2003, மன்னார் மாவட்டம், 1வது பதிப்பு, ஏப்ரல் 2003. (கொழும்பு 13: யுனி ஆர்ட்ஸ், 48B, புளுமெண்டால் வீதி). xx, 108 பக்கம், புகைப்படங்கள், விலை: குறிப்பிடப்படவில்லை, அளவு: 29×22 சமீ. இரண்டாவது உலக இந்து மகாநாடு தொடர்பான மன்னார் மாவட்ட நிகழ்வுகள், மன்னார் மாவட்டத்திலுள்ள இந்து ஆலயங்களின் விபரங்கள், இலங்கையில் சைவமும் அதன் தொன்மையும் மன்னார் மாவட்டத்தில் சைவப் பாரம்பரியங்களும் சைவக் கோயில்களும், திருக்கேதீச்சர திருத்தல வரலாறு, திருவானக்கூடம் சித்திவிநாயகர் ஆலயம்-மன்னார், இராஜராஜேஸ்வரி அம்பாள் ஆலயம்- உப்புக்குளம், ஸ்ரீ சிவசுப்பிரமணிய சுவாமி கோவில்-பேசாலை, நானாட்டான் செல்வமுத்துமாரியம்மன் ஆலயம், தலைமன்னார் ஸ்ரீதேவி முத்துமாரியம்மன் தேவஸ்தானம், கட்டாடுவயல் முருகன் ஆலயம்-இலுப்பைக் கடவை, கோயிற்குளம் கற்பகப் பிள்ளையார் கோயில், புதுக்குளம் சித்திவிநாயகர் கோயில், பாலம்பிட்டி அருள்மிகு ஸ்ரீமுத்துமாரியம்மன் ஆலயம், கோயிற்குளம் புதுக்குளம் நுங்குவெட்டி ஐயனார் கோயில், கள்ளியடி கற்பகப்பிள்ளையார் ஆலயம், பெரியபண்டிவிரிச்சான் சித்தி விநாயகர் ஆலயம், வெள்ளாங்குளம் வடக்கு ஐயனார் கோயில், வெள்ளாங்குளம் கரியலுப் பிள்ளையார் ஆலயம், வெள்ளாங்குளம் ஸ்ரீமுருகன் ஆலயம், சிலாவத்துறை ஸ்ரீமுத்துமாரியம்மன் கோயில், தட்சனாமருதமடு முருகன் கோயில், விடத்தல்தீவு கற்பகப் பிள்ளையார் கோயில், மன்னார் வலயக் கல்விப் பாடசாலைகளில் சைவசமயம் கற்பித்தல்-ஓர் கண்ணோட்டம், திருக்கேதீச்சர மகா சிவராத்திரி மடம், சிவபூமியென்னும் திருக்கேதீச்சரத் திருக்கோயில் தொடர்பும் பணிகளும் பட்ட அவலமும் பெற்ற பலன்களும், சித்தி விநாயகர் இந்துக் கல்லூரியும் அதன் கல்வி சமய சமூகப் பணிகளும், மன்னார் மாவட்டத்தில் கலாசாரத் திணைக்களங்களின் செயற்பாடுகள் அதன் மூலம் மாணவர்கள் மக்கள் அடைந்த பயன்பாடுகள், மன்னாரில் இந்து சமய வளர்ச்சிச் சங்கம், சைவ நெறித் தொண்டர் கழகம்-மன்னார் மாவட்டம், அன்னை இல்லத்தின் தோற்றுவாயும் வளர்ச்சியும், சித்தி விநாயகர் இந்துக் கல்லூரியின் இந்து மாமன்றச் செயற்பாடுகள், மன்னார் புனித சவேரியார் பெண்கள் கல்லூரி (தேசிய பாடசாலை) இந்து மாமன்றச் செயற்பாடுகள், மன்னார் புனித சவேரியார் ஆண்கள் கல்லூரி (தேசிய பாடசாலை) இந்து மாமன்றச் செயற்பாடுகள், மன்னார் முருங்கன் மகாவித்தியாலய இந்து மன்றத்தின் செயற்பாடுகள், திருக்கேதீச்சரமும் மடங்களும், 20ஆம் நூற்றாண்டின் பின்னரைப் பகுதியில் சைவ சித்தாந்தம், மனிதப் பிறவியும் வேண்டுவதே, திருவாதிரைப் பெருமகிமை, பசுவின் பெருமை, நித்திய விரதம், அறநெறிப் பாடசாலைகள்-மன்னார் மாவட்டம், மன்னார் மாவட்ட அறநெறிப் பாடசாலைகள், ஆசிரியர் விபரம், விவாகக் கிரியை, இரண்டாவது உலக இந்து மாநாடு போட்டி முடிவுகள், இந்து நலன் வளர்ச்சி இளைஞர் மன்றம், மன்னார் மாவட்டம் ஆகிய 45 ஆக்கங்களை இச்சிறப்பு மலர் உள்ளடக்கியுள்ளது. (இந் நூல் சுன்னாகம் பொது நூலகத்தில் பார்வையிடப்பட்டது. சேர்க்கை இலக்கம் 12221).

ஏனைய பதிவுகள்

Slots777

Capaciteit Begrijpen Nederlands Gokautomaten Toneelspelers Nieuwe Kasteel Machine Mobiele App Cadeau Een Gratis Toets Proefopname Account Fire Kirin Fish Spel Softwar Offlin Fish Game Hoedanig

14396 ருது நூல் சாஸ்திரம்.

ஆசிரியர் பெயர் அறியமுடியவில்லை. கொழும்பு: சரஸ்வதி புத்தகசாலை, 175, செட்டியார் தெரு, 1வது பதிப்பு, ஆண்டு விபரம் தரப்படவில்லை. (யாழ்ப்பாணம்: ஸ்ரீ நிரஞ்சனா அச்சகம், நல்லூர்). 24 பக்கம், விலை: ரூபா 1.50, அளவு: