14096 மட்டுநகர் ; ஸ்ரீ மாமாங்கப் பிள்ளையார் ; ஆலய வரலாறு.

த. நாகையா. (தொகுப்பாசிரியர்). மட்டக்களப்பு: த.நாகையா, கோட்டைமுனை, 1வது பதிப்பு, ஆடி 1996. (மட்டக்களப்பு: புனித வளனார் கத்தோலிக்க அச்சகம்). (12), 44 பக்கம், விலை: குறிப்பிடப்படவில்லை, அளவு: 22×14 சமீ. மட்டக்களப்பு ஸ்ரீ மாமாங்கப் பிள்ளையார் தொடர்பாக இதுவரை பல்வேறு நூல்களிலும் வெளிவந்த தகவல்களை அடிப்படையாக வைத்து முழுமையான கோவில் மற்றும் பிரதேச வரலாற்று நூலொன்றினை ஆசிரியர் தொகுத்தளித்திருக்கிறார். இதில் மட்டக்களப்பு மாநிலம், மட்டு மாநகர், கோட்டைமுனை, அமிர்தகழிக் கிராமம், மாமாங்கம், மாமாங்கக் குளம், மாமாங்கக் குளச் சிறப்பு, ஆலயச் சூழல், ஆலயம் அமைந்த வரலாறு, இலிங்கம் பற்றிய வரலாறு, ஆலய அமைப்பு, இறை சக்தி, சிவனும் விநாயகரும், மாசிமகம்- மகாமகம், கும்பகோணம், தீர்த்தங்கள்-பொது, ஸ்ரீ இராமபிரானும் பிரமகத்தி தோஷமும், மஹாயன பட்சம், ஆடிஅமாவாசை, வருடாந்த மஹோற்சவம், மஹோற்சவ விளக்கம், ஆலய விஷேச பூசைகள், ஆடக சவுந்தரியின் வரலாறுகள், இவ்வாலயத்தில் நிகழ்ந்துள்ள அற்புதங்கள், ஆலய நிர்வாகம், மடங்கள் ஆலய மடங்கள், இராஜகோபுரம் அமைத்தல் ஆகிய தலைப்புகளில் இவ்வரலாறு தொகுத்துத் தரப்பட்டுள்ளது. (இந்நூல் மட்டக்களப்பு பொது நூலகத்தில் பார்வையிடப்பட்டது).

ஏனைய பதிவுகள்

17444 ஆத்திசூடிக் கதைகள் (சிறுவர் கதைகள்).

தேன்மொழி சபா (இயற்பெயர்: திருமதி கனகமணி சபாலிங்கம்). திருக்கோணமலை: திருமதி கனகமணி சபாலிங்கம், 44/12, கிருஷ்ணபுரம், 1வது பதிப்பு, டிசம்பர் 2024. (திருக்கோணமலை: எஸ்.எஸ்.டிஜிட்டல்). ix, 90 பக்கம், விலை: ரூபா 550., அளவு:

17880 நடராஜா செல்வராஜா வாய்மொழி வரலாறு.

கனோல்ட் டெல்சன் பத்திநாதர் (நேர்காணல்), தில்லைநாதன் கோபிநாத், (தொகுப்பாசிரியர்). கலாமணி பரணீதரன் (பதிப்பாசிரியர்). அல்வாய்: ஜீவநதி கலைஅகம், 1வது பதிப்பு, மாசி 2024. (அல்வாய்: பரணி அச்சகம், நெல்லியடி). 52 பக்கம், விலை: ரூபா