நவறாஜினி சண்முகம் (தொகுப்பாசிரியர்). வட்டுக்கோட்டை: செல்வி நவறாஜினி சண்முகம், கள்ளி வீதி, வட்டு. தென்மேற்கு, 1வது பதிப்பு, ஏப்ரல் 2016. (அச்சக விபரம் தரப்படவில்லை). v, 54 பக்கம், புகைப்படங்கள், தகடுகள், விலை: குறிப்பிடப்படவில்லை, அளவு: 20×14.5 சமீ. வட்டுக்கோட்டை அடைக்கலந்தோட்டம் ஸ்ரீ கந்தசுவாமி கோயில் வரலாற்றை எழுதியும் தொகுத்துமிருப்பவர் அவ்வாலய நிறுவுநர் அமரர் கணபதியார் தம்பையா அவர்களின் பீட்டப்பிள்ளையாவார். அமைவிடம், தலம், மானங்காத்த பிள்ளையார், கந்தசுவாமியார் வெளிப்படுதல்-போர்த்துக்கேயர் காலம் (கி.பி.1505-1658), முதலாவது கோயில்-ஒல்லாந்தர் காலம் (கி.பி.1659-1795), இரண்டாவது கோயில் ஆங்கிலேயர் காலம் (கி.பி.1796-1948), வழக்காடுதல், தீர்ப்பு, அடுத்து வந்த வழக்குகளின் தீர்ப்பு, மூன்றாவது கோயில் – தற்போதைய கோவில், பூசகர் வருதல், மகா கும்பாபிஷேகம், பூசைகள், திருப்பணி-கோயிலின் அபிவிருத்தி கி.பி.1913-1932 வரை, ஆலய நிர்வாகம், மஹோற்சவம், மஹோற்சவப் பெருவிழாதிருவிழாக்கள், ஆலய உரிமை மாற்றம், ஆலய நிறுவுநரின் கடைசிக் காலம், ஆலய உரிமை சந்ததிவசம், பரிபாலன சபை, பராபரிப்புத் தத்துவம், இக்கோயில் கணபதியார் தம்பையா அவர்களால் கட்டுவிக்கப்பட்டது என்பதற்கான ஆதாரங்கள், கோவிலில் நடந்த அற்புதங்களும் தரிசனங்களும், மூர்த்தி-தலம்- தீர்த்தம், ஆலயத்தின் வீதிகள், கோபுரங்கள், பிரபந்தங்கள் (அடைக்கலங்கோவை, திருவூஞ்சல், கந்தரேசல்) ஆகிய தலைப்புகளின் கீழ் மேற்படி கோவில் பற்றிய விரிவான பல தகவல்களை ஆவணப்படுத்தியிருக்கிறார். (இந்நூல் நூலகம் நிறுவன இணையத்தள நூலகத்தில் பார்வையிடப்பட்டது. சேர்க்கை இலக்கம் 053147)