இதழாசிரியர் குழு. பேராதனை: இந்து மாணவர் சங்கம், இலங்கைப் பல்கலைக்கழகம், 1வது பதிப்பு,1998 (களுபோவில: டெக்னோ பிரின்ட், இல. 6, ஜெயவர்த்தன அவென்யூ,தெகிவளை). xiii, 87+38 பக்கம், புகைப்படங்கள், தகடுகள், விலை: குறிப்பிடப்படவில்லை, அளவு: 25×19 சமீ. வாழ்த்துரைகள், ஆசியுரைகள் மற்றும் மன்ற அறிக்கைகளையும் சமயம் சார்பான கட்டுரைகளையும் இம்மலர் உள்ளடக்குகின்றது. இவ்விதழில் செல்வி.கோமதி கிருஷ்ணசாமி, ஸ்ரீ.பிரசாந்தன் ஆகியோரின் கவிதைகளுடன், பொருளாதார நெருக்கடிக்குள்ளான இந்து மாணவர்களுக்கான புலமைப் பரிசில் திட்டம் (பா.சஞ்சயன்), பாட்டின் மூலம், அபிடேகக் கிரியை முறைகளும் தத்துவமும் (க.லோகப்பிரகாசம்), கிராமியத் தெய்வங்கள் – ஓர் அறிமுகம் (செல்வி கலாவல்லி பத்மநாதன்), மெஞ்ஞானம் சிரிக்கிறது (வல்லிபுரம் சுகந்தன்), இந்து சமயம் எதிர்நோக்கும் தற்கால இடர்கள் (நா.ஹரிதர்), இரண்டாம் பக்தியுகம் – சோழர்காலம் (க.விஷ்ணுகரன்), இலங்கையில் இந்து மதத்தின் செல்வாக்கு: வரலாற்றுக்கு முற்பட்ட காலம் முதல் கி.பி. 10ம் நூற்றாண்டு வரை (க.ஜெயானந்தமூர்த்தி), தென்கிழக்காசிய நாடுகளில் இந்து மதத்தின் செல்வாக்கு (செல்வி.எஸ்.சிவதர்ஷினி), இந்து மதம் ஓர் அன்பு நெறி (செல்வி.ச.கவிதாஞ்சலி), இந்து மத நூல்களில் ஒழுக்கக் கோட்பாடு (வீ.சுதேசன்), ஆறுமுக நாவலர் – ஒரு மறுபரிசீலனை (ச.பாஸ்கரன்), மனமும் மதமும் (சியாமளா சிவம்), நல்ல ஒழுக்கம் நன்மை தரும் (நவரட்ணம் நந்தரூபன்), கும்பாபிஷேக மகிமை (சோ.செந்தில்குமார்), கும்பாபிஷேகத் தத்துவம் (க.ஆனந்தகுமாரசர்மா), ஆலயத்தின் அமைப்பும் அதன் முக்கியத்துவமும் (ப.ஜெயகாந்த்), ‘அங்கு உரைக்கு என் அளவு?” (க.ஜெயநிதி), மக்கட் சேவையே மகேசன் சேவை (செல்வி வேழினி வல்லிபுரம்), ஆலய வழிபாடும் இன்றைய காலத்தில் அதன் தேவையும் (தி.சண்முகதாசன்), மட்டக்களப்புப் பகுதியில் நாகதம்பிரான் வழிபாடு (செல்வி.செ.செல்வராசா) ஆகிய படைப்பாக்கங்கள் இடம்பெற்றுள்ளன. இவ்வாண்டு மலரின் இதழாசிரியர்களாக கோ.சுரேஷ், கு.பார்த்தீபன், ஐ.சதானந்தன், ஜெ.திவாகர், வி.மீரா ஆகியோர் பணியாற்றியுள்ளனர். (இந்நூல் கொழும்புத் தமிழ்ச் சங்க நூலகத்தில் பார்வையிடப்பட்டது. சேர்க்கை இலக்கம் 20828).
ten Finest Casinos on the internet The real deal Money
Articles Sportsbook Promotions | snap the link now Search for Costs And you can Handling Rates Exactly what the Better Las vegas Gambling enterprises Offer