14950எங்களுடன் இன்னமும் வாழும் மாவை வரோதயன்-நினைவு மலர்.

மலர்க் குழு. கொழும்பு 6: தேசியகலை இலக்கியப் பேரவை, இல. 571×15, காலி வீதி, வெள்ளவத்தை, 1வது பதிப்பு, ஒக்டோபர் 2009. (அச்சக விபரம் தரப்படவில்லை). 60 பக்கம், புகைப்படம், விலை: குறிப்பிடப்படவில்லை, அளவு: 20.5/14 சமீ. இம்மலரில் மாவை வரோதயன் பற்றிய அஞ்சலிக் குறிப்புகளை ஆழ்வாப்பிள்ளை கந்தசாமி, சோ.தேவராஜா, சி.சிவசேகரம், சி.கா.செந்திவேல், கோகிலா மகேந்திரன், கமலினி செல்வராசன், பொ.கோபிநாத், சுதாராஜ், வேல் அமுதன், சி.யமுனானந்தா, திருமதி பா.கணேசதுரை, குந்தவை ஆகியோரும், அஞ்சலிக் கவிதாஞ்சலிகளை ஜெயகௌரி, அருணன், சுகாபரணி, லோ.துஷிகரன், இதயராசன், இரா.சடகோபன், வசந்தி தயாபரன், பூமகன், செ.சக்திதரன், கிண்ணியா அமீர் அலி, ஜின்னாஹ் ஷரிபுத்தீன் ஆகியோரும் வழங்கியுள்ளனர். இறுதிப் பிரிவில் மாவை வரோதயனின் சில ஆக்கங்களும் இடம்பெற்றுள்ளன. ஈழத்து எழுத்தாளரான அமரர் மாவை வரோதயன் (இயற்பெயர்: சிவகடாட்சம்பிள்ளை சத்தியகுமாரன், 12.09.1965- 2908.2009) கவிதைகள், சிறுகதைகள், கட்டுரைகள், நாடகங்கள் எனப் பலவற்றையும் எழுதி வழங்கியவர். யாழ்ப்பாணம் தொழில்நுட்பக் கல்லூரியில் பயின்று கொழும்பில் பரீட்சைத் திணைக்களத்திலே சிலகாலம் பணிபுரிந்தார். பின்னர் அவர் சுகாதாரப் பரிசோதகராக(P.ர்.ஐ) வெலிசறையில் உள்ள மார்பு சிகிச்சை நிலையத்தில் பணியாற்றினார். சில காலம் மாவை வரோதயன் மூளைப் புற்றுநோயால் பாதிக்கப்பட்டு, 2009,ஆகஸ்ட் 29 இல் யாழ்ப்பாணத்தில் இறந்தார். இவரது துணைவியார் ஜெயகௌரி. இவர்களுக்கு அருணன், சுகாபரணி என்ற இரு பிள்ளைகளும் உள்ளனர். (இந்நூல் கொழும்புத் தமிழ்ச் சங்க நூலகத்தில் பார்வையிடப்பட்டது. சேர்க்கை இலக்கம் 54137).

ஏனைய பதிவுகள்

12659 – இலங்கை மத்திய வங்கி: ஆண்டறிக்கை 1970.

இலங்கை மத்திய வங்கி. கொழும்பு1: நாணயச் சபை, இலங்கை மத்திய வங்கி, தபால் பெட்டி இலக்கம் 590, 1வதுபதிப்பு, மார்ச் 1971. (கொழும்பு 12: குமரன் பதிப்பகம், 201, டாம் வீதி). (8), 286,

12551 – தமிழ்: ஆண்டு 5.

இ.விசாகலிங்கம் (பதிப்பாசிரியர்). கொழும்பு 10: கல்வி வெளியீட்டுத் திணைக்களம், மாளிகாவத்தைச் செயலகம், 2வது பதிப்பு, 1986, 1வது பதிப்பு, 1985. (கொழும்பு 11: மெய்கண்டான் அச்சகம், 161, கடற்கரைத் தெரு). viii, 205 பக்கம்,

14215 தெய்வீக பாடல்கள்.

பொன். வல்லிபுரம் (தொகுப்பாசிரியர்). கொழும்பு 6: மயூரபதி ஸ்ரீ பத்திரகாளியம்மன் தேவஸ்தானம், 1வது பதிப்பு, 1991. (கொழும்பு 10: இம்பீரியல் பிரஸ், 25, முதலாம் டிவிஷன், மருதானை). 114 பக்கம், விலை: ரூபா 50.00,