15454 தமிழ் இலக்கிய வினா-விடைத் தொகுப்பு: தமிழ் மொழியும் இலக்கியமும் (புதிய பாடத்திட்டம்) தரம் 10,11 மாணவர்களுக்கானது.

இரா.நிஷாந்தன். கிளிநொச்சி:  இரா.நிஷாந்தன், ஆசிரியர், கிளி/இராமநாதபுரம் மகா வித்தியாலயம், 1வது பதிப்பு, தை 2019. (மீசாலை: சக்தி பதிப்பகம், ஏகாம்பரம் வீதி, மீசாலை கிழக்கு).

256 பக்கம், விலை: ரூபா 300.00, அளவு: 20.5×14.5 சமீ.

இரு பிரிவுகளாக ஒழுங்குபடுத்தப்பட்டுள்ள இந்நூலின் முதலாம் பிரிவில் தரம் 10இற்குரிய பாடத்திட்டத்திற்கமைவாக நீதிப் பாடல்கள், நாவலர் எழுந்தார்-கட்டுரை, பாரதியார் சுயசரிதை, தனிப்பாடல்கள், கம்பியூட்டர்-சிறுகதை, திருக்குற்றாலக் குறவஞ்சி, நாட்டார் பாடல்கள், கம்பராமாயணம் (குகப் படலம்), எது நல்ல சினிமா-கட்டுரை ஆகிய ஒன்பது பாடங்களும் பின்னிணைப்பாக, முதலாம், இரண்டாம், மூன்றாம் தவணைகளுக்குரிய வினாத்தாள்களும் தரப்பட்டுள்ளன. இரண்டாம் பிரிவில் தரம் 11இற்குரிய பாடத்திட்டத்திற்கமைவாக திருக்குறள்-பேதைமை, சங்கப் பாடல்கள், இலக்கியமும் சமநோக்கும்-கட்டுரை, மூத்தம்மா-சிறுகதை, தற்காலக் கவிதைகள், அற்றைத் திங்கள்-நாடகம், மகாபாரதம்) கிருஷ்ணன் தூதுச் சருக்கம்), தத்தை விடுதூது-கவிதை, தமிழ்ப் பண்பாடு-கட்டுரை ஆகிய ஒன்பது பாடங்களும், பின்னிணைப்பாக, முதலாம், இரண்டாம், மூன்றாம் தவணைகளுக்குரிய வினாத்தாள்களும் தரப்பட்டுள்ளன.

ஏனைய பதிவுகள்

10 Deposit Gambling enterprises Australia

Articles Readily available Online game Publication From Inactive Slot Deposit ten Play with 70 Casino Greatest Team Checking account Incentives And you may Promotions Type