தேசிய கல்வி நிறுவகம். மகரகம: நிறுவன அபிவிருத்திப் பிரிவு, தேசிய கல்வி நிறுவகம், 1வது பதிப்பு, 2010. (மஹரகம: அச்சகம், தேசிய கல்வி நிறுவகம்). xxxv, 154 பக்கம், விலை: ரூபா 380.00, அளவு: 25.5×18.5 சமீ. இந்திய மொழிகளுக்கான நடுவண் மையத்தின் ஆலோசனையுடன் தயாரிக்கப் பட்டுள்ள மும்மொழிச் சொற்களஞ்சியமானது இரண்டாம் மொழியாகத் தமிழை அல்லது சிங்களத்தினைப் புதிதாகக் கற்கும் ஒருவருக்கு மிக முக்கியத்துவம் வாய்ந்த நூலாக அமைந்துள்ளது. மொழியியல் ஒலிப்பு முறைக்கு அமைவாக சொற்களை முறையாக ஒலிக்கும் முறை உள்ளடக்கப்பட்டுள்ளமை இதன் விசேட அம்சமாகும். இரண்டாம் தேசிய மொழியை முதன்முறையாகப் பயிலும் ஒருவருக்கு இது மிகப் பிரயோசனமாக அமையும். (இந்நூல் கொழும்புத் தமிழ்ச் சங்க நூலகத்தில் பார்வையிடப்பட்டது. சேர்க்கை இலக்கம் 65697).