14423 மொழிபெயர்ப்பும் சொல்லாக்கமும்.

மு.கணபதிப்பிள்ளை. சென்னை 17: அருள் நிலையம், 12, உஸ்மான் ரோடு, 1வது பதிப்பு, 1967. (சென்னை 17: சௌந்தரா பிரிண்டர்ஸ்). 76 பக்கம், விலை: குறிப்பிடப்படவில்லை, அளவு: 18×12.5 சமீ. தென்புலோலியூர் மு.கணபதிப்பிள்ளை பருத்தித்துறை புலோலி என்ற கிராமத்தில் தமிழ் வித்துவப் பரம்பரையில் பிறந்தவர். இலங்கை அரச மொழித் திணைக்களத்தில் மொழிபெயர்ப்பாளராகப் பணியாற்றியவர். இலங்கை வானொலியிலும், இலக்கிய மேடைகளிலும் மற்றும் இலக்கிய நூலுருவாக்கத்திலும் பெரும் பங்களிப்பை வழங்கியிருந்தவர். இவரது மனைவி தனபாக்கியம் ஒரு வயலின் இசைக்கலைஞர். இலங்கை வானொலிக் கலைஞர் கமலினி செல்வராஜன் இவர்களது மூத்த மகள் ஆவார். தென்புலோலியூர் மு.கணபதிப்பிள்ளை அவர்கள் தமிழ் மொழி/தமிழ் இலக்கியம் தொடர்பாக அவ்வப்போது எழுதியிருந்த சுவையான கட்டுரைகள் ஆறின் தொகுப்பு இது. மொழிபெயர்ப்பும் சொல்லாக்கமும், “பன்றியிரும்பு”ப் பதம் பார்த்த கதை, “திணைக்களம்” வந்த கதை, பாயிரமும் மதிப்புரையும், விமரிசனமும் மதிப்புரையும், சொல்லாக்கம் ஆகிய தலைப்புகளில் இக்கட்டுரைகள் எழுதப்பட்டுள்ளன. (இந்நூல் கொழும்புத் தமிழ்ச் சங்க நூலகத்தில் பார்வையிடப்பட்டது. சேர்க்கை இலக்கம் 18944).

ஏனைய பதிவுகள்

Gambling enterprise

Articles Which are the Easiest On-line casino Websites To experience For the? Jumers Casino and Hotel Exactly what are the Benefits of Joining A real