14433 அரசகரும மொழிகள் தேர்ச்சி மட்டம் 2: தமிழ்.

எஸ்.ஜே.யோகராசா. கொழும்பு: அரசகரும மொழிகள் திணைக்களம், தேசிய சகவாழ்வு, கலந்துரையாடல் மற்றும் அரசகரும மொழிகள் அமைச்சு, பாஷா மந்திரய, 341/7, கோட்டே வீதி, ராஜகிரிய, 1வது பதிப்பு, 2016. (கொழும்பு 8: அரசாங்க அச்சுத் திணைக்களம், 118, பேஸ்லைன் வீதி). (8), viii, 234 பக்கம், விளக்கப்படங்கள், விலை: ரூபா 600., அளவு: 25×19 சமீ., ISBN: 978-955-9180-38-8. இந்நூல் இரண்டாம் மட்ட அரசகரும மொழித் தேர்ச்சியில் சித்தியடைய வேண்டிய அரசகரும உத்தியோகத்தர்களுக்காக எழுதப்பட்டுள்ளது. ஆரம்பத்தில் பேச்சு மொழிக்கு முக்கியத்துவம் அளிக்கப்பட்டுள்ளது. அதன்பின் எழுத்துக்கள் அறிமுகம் செய்யப்பட்டுள்ளன. பேச்சுத்தமிழ் எட்டாம் பாடத்திலிருந்து எழுத்துத் தமிழாக மாறும் விதம் கூறப்பட்டுள்ளது. ஆகவே ஆரம்பத்திலுள்ள பாடங்களை ஆசிரியரின் உதவியோடும் இறுவட்டின் உதவியோடும் பேசப்பழகவும். இந் நூலில் எல்லா வாக்கிய அமைப்புகளும் தரப்படவில்லை. தேவையானவைகள் மட்டுமே தரப்பட்டுள்ளன. மாணவர்கள் மேலும் தமது அறிவை ஆசிரியரின் உதவியோடும், ஏனைய நூல்களைக் கற்றும் வளர்த்துக்கொள்ளவேண்டும் என எதிர்பார்க்கப்படுகின்றது. தமிழில் உச்சரிப்பு மாற்றம் கருத்தை மாற்றிவிடுமாதலால், உச்சரிப்பைச் சரியாக உச்சரிக்க வலியுறுத்தப்பட்டுள்ளது. இந்நூலாசிரியர் களனிப் பல்கலைக்கழகத்தின் மொழியியல்துறை பேராசிரியராவார். (இந்நூல் கொழும்புத் தமிழ்ச் சங்க நூலகத்தில் பார்வையிடப்பட்டது. சேர்க்கை இலக்கம் 65468).

ஏனைய பதிவுகள்