14472 சித்த மருத்துவம் 199/94.

கே.மனோன்மணி (இதழாசிரியர்), பி.ஸ்ரீகணேசன் (உதவி ஆசிரியர்). யாழ்ப்பாணம்: சித்த மருத்துவ மாணவர் மன்றம், யாழ்ப்பாணப் பல்கலைக்கழகம், 1வது பதிப்பு, 1994. (யாழ்ப்பாணம்: மஹாத்மா அச்சகம், ஏழாலை). (20), 72 பக்கம், தகடுகள், விலை: குறிப்பிடப்படவில்லை, அளவு: 24×18.5 சமீ. இவ்விதழில் ஆசியுரைகள், சிறப்புச் செய்திகளுடன், தமிழ் மரபில் உளவியல் ஆய்வு நோக்கு (வெற்றிவேல் சக்திவேல்), செப்ற்றிஸீமியா (எஸ்.பி.ஆர்.சீர்மாறன்), கவிதை: மௌனத்தின் மொழி (இ.இராஜீவி), மாரடைப்பு (க.சிவாதரன்), சிரிப்போம் சிந்திப்போம் (மலர் வெளியீட்டுக் குழு), கவிதை: சித்தர் மருத்துவம் (பு.ஸ்ரீகணேசன்), இயற்கை தரும் மூலிகைகளினால் தீரும் நோய்கள் பற்றிய சில குறிப்புகள் (T.பூபதீஸ்வரி), மதுமேகத்தில் நாவல் விதை மாத்திரையின் செயல்திறன் பற்றிய ஆய்வு (மி.ஸ்ரீகாந்தன்), யோகமும் நல்வாழ்வும் (என்.ஜீவலதா), உயிர்ச்சத்தும் அதன் உடற்றொழிற்பாடுகளும் (சுகந்தி தம்பிராசா), முக்கிய சில நோய் நிலைகளில் உணவின் பங்கு (நா.வர்ணகுலேந்திரன்) ஆகிய படைப்பாக்கங்கள் இடம்பெற்றுள்ளன.

ஏனைய பதிவுகள்