14491 இந்தியக் கலை-1.

உ.நவரத்தினம் (பதிப்பாசிரியர்). மஹரகம: தொலைக்கல்வித் துறை, தேசிய கல்வி நிறுவகம், 1வது பதிப்பு, 1993. (கொழும்பு: யூ.ஆர்.ஜீ. பிரின்டர்ஸ்). 76 பக்கம், விளக்கப்படங்கள், விலை: குறிப்பிடப்படவில்லை, அளவு: 27×21.5 சமீ. சித்திரக்கலை ஆசிரியர்களுக்கான கல்விப் பாடநெறி. மூன்று பகுதிகளில் பாடங்கள் பிரித்துத் தரப்பட்டுள்ளன. முதற் பகுதியில் இந்து நதிக்கரை நாகரிகம் பற்றியும், இரண்டாம் பகுதியில் அஜந்தா சுவர் ஓவியங்கள் பற்றியும், பகுதி மூன்றில் இந்தியச் சிற்பக்கலை, பொழிப்பு, பிற்சோதனை, ஒப்படை, விடைகள், மேலதிக வாசிப்பு ஆகியனவும் இடம்பெற்றுள்ளன. (இந்நூல் கொழும்புத் தமிழ்ச் சங்க நூலகத்தில் பார்வையிடப்பட்டது. சேர்க்கை இலக்கம் 23231).

ஏனைய பதிவுகள்