மு.புஷ்பராஜன் (தொகுப்பாசிரியர்). யாழ்ப்பாணம்: நெய்தல் வளர்பிறை மன்றம், குருநகர், 1வது பதிப்பு, 1971. (அச்சக விபரம் தரப்படவில்லை). 40 பக்கம், விலை: குறிப்பிடப்படவில்லை, அளவு: 24×18 சமீ. தொகுப்பாளர் கருத்து (மு.புஷ்பராஜன்), நெய்தல் வளர்பிறை மன்றத்தார் இன்று (செயலாளர்), ஈழமும் இரு கண்ணும் (நீ.மரியசேவியர்), நெய்தல் (புலவர் வேல்மாறன்), சிற்பக் கலைஞரிடம் சில கேள்விகள், ஊழின் வலி (தூயமணி), அகப் பரிசோதனையற்ற இன்றைய நாடகங்கள் எதற்காக? (ஜே.எம்.இராசு), ஓர் இதயம் வறுமை கொண்டிருக்கிறது (அ.யேசுராசா), மனிதா (ச.தங்கராசா), தற்கால ஓவியக் கலை (அ.மாற்கு), விரக்தி (வேங்கைமார்பன்), பல்துறைக் கலைஞர் எஸ்.என்.ஜேம்ஸ் அவர்களின் பேட்டி, சலிப்பு (யோ.மரியாம்பிள்ளை), இசைக்கலையும் எமது சமூகமும் (ரீ.பாக்கியநாதன்), ஒரு வாசகனின் அபிப்பிராயம் (குருநகரோன்), திரைப்படத்துறையில் வடக்கின் வீழ்ச்சியும் தெற்கின் எழுச்சியும் (மு.புஷ்பராஜன்) ஆகிய படைப்பாக்கங்கள் இச்சிறப்பிதழில் இடம்பெற்றுள்ளன. (இந்நூல் கொழும்புத் தமிழ்ச் சங்க நூலகத்தில் பார்வையிடப்பட்டது. சேர்க்கை இலக்கம் 34684).