T.சௌந்தர் (இயற்பெயர்: தங்கவடிவேல் சௌந்தர்). சென்னை 600 078: டிஸ்கவரி புக் பேலஸ், இல. 6, மஹாவீர் கொம்ப்ளெக்ஸ், முனுசாமி சாலை, கே.கே.நகர் மேற்கு, பாண்டிச்சேரி கெஸ்ட் ஹவுஸ் அருகில், 1வது பதிப்பு, ஜுலை 2016. (அச்சக விபரம் தரப்படவில்லை). (24), 25-160 பக்கம், விலை: இந்திய ரூபா 140., அளவு: 21.5×14 சமீ., ISBN: 978- 93-84301-72-9. தொடக்ககால இசை முயற்சி, ஜி.ராமநாதன் காலம்- பேச்சோசைப் பாடல்கள், நவீன தமிழ்த் திரை இசையின் தொடக்கப்புள்ளி – சி.ஆர்.சுப்பராமன், விஸ்வநாதன் – ராமமூர்த்தி வருகை: மெல்லிசைப் பாங்கான இசையை உள்ளீடு செய்தது, இளையராஜா, உலகமயமாக்கல் பொருளாதாரச் சூழல் தகவமைக்கும் இயந்திர இசைக் கோலம் ஆகிய ஆறு இயல்களில் இந்நூல் விரிவாக தமிழ் சினிமா இசை பற்றி விபரிக்கின்றது. புலம்பெயர்ந்து பிரித்தானியாவில் வாழும் இந்நூலாசிரியர் சௌந்தர், இலங்கையில் கம்பர்மலையைப் பிறப்பிடமாகக் கொண்டவர். சிறந்த ஓவியர். நுண்கலைப் புலமையாளர் பாரம்பரியத்தில் வந்த குடும்பம் இவருடையது. தந்தையார் தங்கவடிவேல் புகழ்பெற்ற ஆசிரியரும் சீனப் பொதுவுடைமைக் கட்சியின் செயற்பாட்டாளருமாவார். கர்நாடக சங்கீத ஞானம் மிகுந்தவர். இவரது பெரியதந்தையார் குழந்தைவேல் புகழ்பெற்ற கர்நாடக இசைப்பாடகர்.