சிறீதேவி கண்ணதாசன். சுழிபுரம்: பொன்னாலை சந்திர பரத கலாலயம், பறாளாய் வீதி, 1வது பதிப்பு, ஜுன் 2011, 1வது பதிப்பு, நவம்பர் 2007. (யாழ்ப்பாணம்: கரிகணன் (தனியார்) நிறுவனம், 672 B, காங்கேசன்துறை வீதி). xiv, 146 பக்கம், விலை: ரூபா 675., அளவு: 29×21 சமீ., ISBN: 978-955-50660-0-6. இலங்கைப் பாடசாலைகளில் கற்பிக்கப்படுகின்ற பரத நாட்டிய பாடத்திற்கான கலைத்திட்டத்திலே சேர்க்கப்பட்டுள்ள பரத நாட்டிய செய்முறை விடயங்கள் இந்நூலில் உள்ளடக்கப்பட்டுள்ளன. பந்தனை நல்லூர் பாணியிலான பரத நாட்டிய அடவுகளின் சொற்கட்டுகள் மற்றும் அலாரிப்பு முதல் தில்லானா வரையான உருப்படிகளின் செய்முறைகள், பாடல்கள் என்பன தாள அங்கக் குறியீடுகளுடன் எழுதப்பட வேண்டிய முறைகள் பற்றி விளக்கப்பட்டுள்ளன. அடவு, அலாரிப்பு, ஜதிஸ்வரம், சப்தம், கௌத்துவம், பதவர்ணம், தில்லானா, பதம், கீர்த்தனம், சௌக்ககால கீர்த்தனம், அஷ்டபதி, ஜாவளி, தோடய மங்களம், யதி அமைப்பும் கோர்வை ஆக்கமும், திரிகாலத் தீர்மானம் ஆகிய 15 அத்தியாயங்களுடன், மேலதிகமாக க.பொ.த. சாதாரணதரம், க.பொ.த உயர்தரம், வட இலங்கைச் சங்கீத சபைப் பரீட்சை ஆகியவற்றுக்கான கடந்தகாலப் பரீட்சை வினாக்கள் தனித்தனி அத்தியாயங்களாக மேலும் மூன்று அத்தியாயங்களுமாக மொத்தம் 18 அத்தியாயங்களில் இந்நூல் எழுதப்பட்டுள்ளது.