எஸ்.சிவானந்தராஜா. பண்டத்தரிப்பு: எஸ்.சிவானந்தராஜா, இந்துக் கல்லூரி வீதி, செட்டிகுறிச்சி, 1வது பதிப்பு, டிசம்பர் 2018. (யாழ்ப்பாணம்: வானவில் பிரின்டர்ஸ், பண்டத்தரிப்பு).
(5), 47 பக்கம், விலை: ரூபா 200.00, அளவு: 20.5×12.5 சமீ., ISBN: 978-955-38461-3-6.
கர்நாடக சங்கீதக் கலைஞரும், ஆய்வாளரும், எழுத்தாளரும், ஓய்வுநிலை ஆசிரியருமான கலாபூஷணம் எஸ். சிவானந்தராஜாவின் கவிதைகளின் தொகுப்பு. இதில் தமிழன்னையின் அழகு என்ற கவிதை முதலாக அமரர் திருமதி ஞானகுமாரி சிவனேசன் பேரில் பாடப்பெற்ற கவிதாஞ்சலி ஈறாக 48 கவிதைகள் இடம்பெற்றுள்ளன. இவற்றில் தமிழன்னையின் பெருமை பேசும் கவிதைகளுடன், இலங்கைத் திருநாடு பற்றிய புகழ்பாடும் கவிதைகளும், நூலகம் சென்றிட ஊக்குவிக்கும் கவிதைகளும், சிறுவர்களுக்கான சில கவிதைகளும், நயினை நாகபூஷணி, நல்லூர் முருகன், திருக்கேதீஸ்வரப் பெருமான் ஆகியோர் மேற் பாடப்பெற்ற கவிதைகளும், திருமதி சரஸ்வதி பாக்கியராஜா, எழில் ஞானசேகரன், ஐயாத்துரை சிவபாதம், ஞானகுமாரி சிவனேசன் ஆகியோரின் பிரிவின்போது பாடப்பெற்ற நினைவாஞ்சலிக் கவிதைகளும் அடங்குகின்றன.