ஈழத்துப் பூராடனார் (இயற்பெயர்: க.தா.செல்வராசகோபால்). கனடா: ஜீவா பதிப்பகம், இல. 3, 1292 Sherwood Mills Blvd, Mississauga L5V1S6, Ontario, 1வது பதிப்பு, 2004. (கனடா: ரீ கொப்பி, டொரன்டோ).
xvi, 225 பக்கம், விலை: குறிப்பிடப்படவில்லை, அளவு: 21×14 சமீ.
யூதாசு இஸ்காரியோத்து என்பவர் இயேசுவின் பன்னிரு திருத்தூதர்களுள் ஒருவர். இவர் இயேசுவை முப்பது வெள்ளிக்காசுகளுக்காக முத்தமிட்டு குருக்களும் பரிசேயரும் அனுப்பிய காவலர்களிடம் காட்டிக்கொடுத்தார் என விவிலியம் கூறுகின்றது. இதில் சம்பந்தப்பட்ட அந்த முப்பது வெள்ளிக்காசுகளும் தத்தம் எண்ணங்களை தம் குரலாக ஒலிப்பதே இந்நாடகமாகும். 30 காட்சிகளில் முப்பது வெள்ளிக்காசுகளும் தத்தம் பங்கினை பாடல் வரிகளில் இசைக்கின்றன. ஒவ்வொர காட்சியிலும் இறை வார்த்த, இடம், காலம், பாத்திரர்கள், நிகழ்ச்சி என்பன முறையே குறிப்பிடப்பட்டுள்ளன. தொடர்ந்து காட்சியை விளக்கும் பின்னணிப்பாடல் தொடங்கி காட்சி விரிகின்றது. ஒவ்வொரு காட்சிக்கும் முதலாவது வெள்ளிக் காசின் குரல், இரண்டாவது வெள்ளிக் காசின் குரல், மூன்றாவது வெள்ளிக் காசின் குரல் என்றவாறாக நாடகம் அமைகின்றது. (இந்நூல் மட்டக்களப்பு பொது நூலகத்தில் பார்வையிடப்பட்டது. சேர்க்கை இலக்கம் 3705).