மாயன் (இயற்பெயர்: இரா.ஸ்ரீஞானேஸ்வரன்). திருக்கோணமலை: கலை கலாசார அபிவிருத்தி அமையம், இல. 159 யுஇ கடல்முக வீதி, 1வது பதிப்பு, பெப்ரவரி 2013. (திருக்கோணமலை: எஸ்.எஸ். டிஜிட்டல்ஸ், 58, வித்தியாலயம் வீதி).
63 பக்கம், விலை: ரூபா 200., அளவு: 20.5×14.5 சமீ., ISBN: 978-955-44132-0-7.
ஜுலை 2012 முதல் திருக்கோணமலையிலிருந்து வெளிவரும் ‘மலை முரசு’ பத்திரிகையின் ஆசிரியராகப் பணியாற்றும் மாயன், 1999 முதல் 2012வரை தான் எழுதிய எட்டுக் கதைகளை இந்நூலில் தொகுத்து வழங்கியுள்ளார். தன்னைச் சுற்றிலும் நடப்பவற்றைப் பார்க்கும்போது எழுகின்ற மன நெருடல்கள் தான் இவரது சிறுகதைகளாக வடிவம் பெற்றுள்ளன. சமூக அக்கறையுள்ள ஒரு படைப்பாளியின் பார்வையில் இச்சமூகமும் சக மனிதர்களும் எப்படியெல்லாம் அடையாளம் காட்டப்படுகிறார்கள் என்பதை இக்கதைகளை வாசிப்பவர்களால் எளிதில் புரிந்துகொள்ள முடிகின்றது. இத்தொகுப்பில் அவனும் அதுவும், ஒரு புயலின் பிறப்பு, நசுங்கல், நிறங்களற்ற கனவு, ஊமையின் பாடல், சபிக்கப்பட்ட நாயின் சாவு, பரிநிர்வாணம், அஞ்ஞாதவாசம் ஆகிய எட்டுக் கதைகள் இடம்பெற்றுள்ளன.