15812 பவளமணி: கட்டுரைத் தொகுப்பு.

சிவஸ்ரீ தியாக சோமாஸ்கந்தராசக் குருக்கள் (தொகுப்பாசிரியர்). யாழ்ப்பாணம்: நெல்லண்டையான் வெளியீடு, இல. 90, ஞானவைரவர் வீதி, கோண்டாவில், 1வது பதிப்பு, ஐப்பசி 2015. (யாழ்ப்பாணம்: கரிகணன் (தனியார்) நிறுவனம், 681, காங்கேசன்துறை வீதி).

xviii, 288 பக்கம், விலை: ரூபா 500., அளவு: 21×14.5 சமீ., ISBN: 978-955-42695-0-7.

தகைசார் வாழ்நாட் பேராசிரியர் அ.சண்முகதாஸ் அவர்களுடைய பவளவிழாவை முன்னிட்டு 14.10.2015 அன்று வெளியிடப்பட்ட கட்டுரைத் தொகுதி. இந்நூலில் 19 கட்டுரைகள் இடம்பெறுகின்றன. அவற்றுள் பேராசிரியர் சண்முகதாஸ் அவர்கள் எழுதிய 14 கட்டுரைகளும் சிவஸ்ரீ தியாக சோமாஸ்கந்தராசக் குருக்கள் எழுதிய கட்டுரையும், மனோன்மணி சண்முகதாஸ் எழுதிய கட்டுரையும், வடமராட்சி வலயக் கல்விப் பணிப்பாளர் சி.நந்தகுமார் எழுதிய கட்டுரையும், கற்கோவளம் மெதடிஸ்த மிஷன் தமிழ் கலவன் பாடசாலை அதிபர் பொ.அரவிந்தன் எழுதிய கட்டுரையும், ஆசிரியர் வேல் நந்தகுமார் எழுதிய கட்டுரையும் அடங்குகின்றன. தொகுப்பாசிரியர் சிவஸ்ரீ தியாக சோமாஸ்கந்தராசக் குருக்கள் நெல்லண்டை பத்திரகாளி அம்மன், வீரமாகாளியம்மன் ஆதீன கர்த்தாவாவார்.

ஏனைய பதிவுகள்

17075 வென்மேரி விருதுகள் 2022-2023. மலர்க்குழு.

பிரான்ஸ்: வென்மேரி அறக்கட்டளை, 1வது பதிப்பு, ஓகஸ்ட் 2023. (யாழ்ப்பாணம்: நியூ எவகிறீன் அச்சகம், இல. 693, காங்கேசன்துறை வீதி). 76 பக்கம், புகைப்படங்கள், விலை: குறிப்பிடப்படவில்லை, அளவு: 25×19 சமீ. தமிழின் ஆற்றல்மிகு