நந்தினி சேவியர்; (தொகுப்பாசிரியர்). கொழும்பு 10: எஸ்.கொடகே சகோதரர்கள், 661/665/675 பி.டி.எஸ்.குலரத்ன மாவத்தை, மருதானை வீதி, 1வது பதிப்பு, ஜுலை 2019. (வெல்லம்பிட்டிய: சத்துர அச்சகம், 69, குமாரதாச பிளேஸ்).
(7), 8-600 பக்கம், விலை: ரூபா 1850., அளவு: 22×14 சமீ., ISBN: 978-624-00-0190-8.
நந்தினி சேவியர், நீண்டகாலமாக ஈழத்து நவீன இலக்கியத் துறையில் ஈடுபாடுகொண்டிருப்பவர். தன் முகநூலின் வழியாக தனக்குப் பிடித்திருந்ததெனக் கருதி ஆவணப்படுத்தியிருந்த நூற்றுக்கணக்கான ஈழத்து மூத்த, இளைய சிறுகதையாளர்களையும் அவர்களது ஆக்கங்களையும் பற்றி இங்கு கட்டுரை வடிவில் தொகுத்து வழங்கியிருக்கிறார். அவருக்குப் பிடித்திருந்த குறிப்பிட்ட சிறுகதை ஏன் பிடித்திருக்கின்றது என்பதையும், அவரை நிராகரித்த, அவரது இலக்கியப் பங்களிப்பை மறுதலித்த சிறுகதையாளர்களைப் பற்றியும், அவர்களது படைப்பாக்கங்களில் தனது கவனத்தை ஈர்த்த படைப்புகள் பற்றியும் இத்தொடரில் அவர் எழுதியிருக்கிறார்.