15867 உலகப் புவியியல்: க.பொ.த. பத்திர சாதாரண வகுப்பிற்கும் உயர்தர வகுப்பிற்கும் உரியது.

க.குணராசா. யாழ்ப்பாணம்: அன்பு வெளியீடு, 550/7, காங்கேசன்துறை வீதி, 2வது பதிப்பு, ஜனவரி 1966, 1வது பதிப்பு, டிசம்பர் 1964. (யாழ்ப்பாணம்: நாமகள் அச்சகம், 319, காங்கேசன்துறை வீதி).

332 பக்கம், விளக்கப்படங்கள், வரைபடங்கள், விலை: ரூபா 6.80, அளவு: 20×14 சமீ.

நான்கு பகுதிகளாகப் பிரிக்கப்பட்டுள்ள இந்நூலில் ‘பௌதிகப் புவியியல்’ என்ற முதலாம் பகுதியில் பூமி-பொதுவியல்புகள், புவியோடு, நிலப்பரப்பும் நீர்ப்பரப்பும், ஆசியாவின் தரைத் தோற்றம், ஆபிரிக்காவின் தரைத் தோற்றம், வட அமெரிக்காவின் தரைத் தோற்றம், தென் அமெரிக்காவின் தரைத் தோற்றம், ஐரோப்பாவின் தரைத் தோற்றம், அவுஸ்திரேலியாவின் தரைத் தோற்றம், காலநிலையும் வானிலையும், வெப்பநிலை, அமுக்கமும் காற்றுக்களும், மழைவீழ்ச்சி, காலநிலைப் பிரதேசங்கள், இயற்கைத் தாவரம்- காடுகள் ஆகிய 15 பாடங்களும், ‘மக்கட் புவியியல்’ என்ற இரண்டாம் பகுதியில் உலக மக்கள், உலக நாடுகளின் குடித்தொகை விபரங்கள் ஆகிய பாடங்களும், ‘பொருளாதாரப் புவியியல்’ என்ற மூன்றாம் பகுதியில் பொருளாதார நடவடிக்கைகள், தானிய வகைகள், பான வகைகள், கைத்தொழிற் பயிர்கள், மீன்பிடித் தொழில், விலங்கு வேளாண்மை, காடுகளும் காட்டுத் தொழில்களும், வலுப் பொருட்களும் உலோகப் பொருட்களும், உலகின் பிரதான கைத்தொழிற் பிரதேசங்கள், போக்குவரத்து வசதிகள் ஆகிய பாடங்களும், இறுதியாக ‘பிரதேசப் புவியியல்’ என்ற நான்காம்; பகுதியில் ஆசியா, இந்தியா, யப்பான், சீனா, தென்கிழக்காசிய நாடுகள், உலகின் சில நதி வடிநிலங்கள் ஆகிய பாடங்களுமாக மொத்தம் 32 பாடங்கள் விளக்கப்பட்டுள்ளன. (இந்நூல் நூலகம் நிறுவன இணையத்தள நூலகத்தில் பார்வையிடப்பட்டது. சேர்க்கை இலக்கம் 16643).

உலகப் புவியியல்: க.பொ.த. பத்திர சாதாரண வகுப்பிற்கும் உயர்தர வகுப்பிற்கும் உரியது.

க.குணராசா. யாழ்ப்பாணம்: ஸ்ரீ லங்கா புத்தகசாலை, 234, காங்கேசன்துறை வீதி, 5ஆவது பதிப்பு, ஒக்டோபர் 1972, 1வது பதிப்பு, டிசம்பர் 1964,  2வது பதிப்பு, ஜனவரி 1966, 3வது பதிப்பு, நவம்பர் 1970, 4வது பதிப்பு, நவம்பர் 1970.  (யாழ்ப்பாணம்: ஸ்ரீ லங்கா அச்சகம், 234, காங்கேசன்துறை வீதி).

371 பக்கம், விளக்கப்படங்கள், வரைபடங்கள், விலை: ரூபா 6.75, அளவு: 20×14 சமீ.

பௌதிகப் புவியியல், மக்கட் புவியியல், பொருளாதாரப் புவியியல், பிரதேசப் புவியியல் ஆகிய நான்கு பகுதிகளாகப் பிரிக்கப்பட்டுள்ள இந்நூலில்; 2வது பதிப்பில் இடம்பெற்ற ‘இயற்கைத் தாவரம்-காடுகள்’ என்ற பாடம் மாத்திரம் நீக்கப்பட்டு முப்பத்தியொரு பாடங்களாக்கப்பட்டுள்ளன. (இந்நூல் நூலகம் நிறுவன இணையத்தள நூலகத்தில் பார்வையிடப்பட்டது. சேர்க்கை இலக்கம் 18364).

ஏனைய பதிவுகள்