15881 மாணவர் இலகு தேசப்படத் தொகுதி.

க.குணராசா. யாழ்ப்பாணம்: கமலம் பதிப்பகம், 82, பிரவுண் வீதி, நீராவியடி, 1வது பதிப்பு, ஆண்டு விபரம் தரப்படவில்லை. (கொழும்பு 13: யுனி ஆர்ட்ஸ், 48B, புளுமெண்டால் வீதி).

106 பக்கம், வரைபடங்கள், விலை: ரூபா 300.00, அளவு: 28×20 சமீ.

மாணவர்களுக்குரிய இத் தேசப்படத் (யுவடயள) தொகுதியில் பிரபஞ்சத்தில் பூமி, ஞாயிற்றுத் தொகுதி, பூமியின் இயக்கங்கள், வற்றுப்பெருக்கு, உலகின் தரைத்தோற்றம், இலங்கையின் நிலையம், தொலமியின் இலங்கை, இலங்காபுரி, புராதன ஈழம், எல்லாளன் கால இலங்கை, இலங்கை மாவட்டங்கள், யாழ்ப்பாண மாவட்டம், யாழ்ப்பாண அயல்தீவுகள், கிளிநொச்சி மாவட்டம், முல்லைத்தீவு மாவட்டம், வவுனியா மாவட்டம், மன்னார் மாவட்டம், திருக்கோணமலை மாவட்டம், மட்டக்களப்பு மாவட்டம், அம்பாறை மாவட்டம், தென் மாவட்டங்கள், புத்தளம் குருநாகல், இலங்கையின் புவிச்சரிதவியல், இலங்கை தரைத்தோற்றம், இலங்கையின் நதிகள், மண்வகை, கனியங்கள், மழைவீழ்ச்சி, பருவ மழைவீழ்ச்சி, வெப்பநிலை, இலங்கைக் காடுகள், இலங்கை புகலரண்கள், இலங்கையில் நெல், தேயிலை, இறப்பர், தென்னை, இலங்கையின் வீதிகள், புகையிரதப் பாதைகள், குடியடர்த்தி, உலகின் மலைகள், உலகின் நதிகள் என இன்னோரன்ன 106 தலைப்புகளில் இத்தேசப்படத் தொகுதிகள் தெளிவான குறிப்புகளுடன் இடம்பெற்றுள்ளன. இந்நூலின் கணனி வடிவமைப்பினை கலாநிதி க.குணராசா, க.உதயகுமார், கு.ஹம்ஸா ஆகியோர் மேற்கொண்டுள்ளனர். (இந்நூல் நூலகம் நிறுவன இணையத்தள நூலகத்தில் பார்வையிடப்பட்டது. சேர்க்கை இலக்கம் 18474).

ஏனைய பதிவுகள்