15937 இவர்களுடன் நான்: 29 ஆளுமைகளின் நேர்காணல்கள்.

க.பரணீதரன். பருத்தித்துறை: ஜீவநதி வெளியீடு, கலையகம், சாமணந்தறை ஆலடிப்பிள்ளையார் வீதி, அல்வாய் வடமேற்கு, அல்வாய், 1வது பதிப்பு, ஓகஸ்ட் 2017. (பருத்தித்துறை: பரணீ அச்சகம், நெல்லியடி).

vi, 282 பக்கம், புகைப்படங்கள், விலை: ரூபா 500., அளவு: 21.5×14.5 சமீ., ISBN: 978-955-4676-67-1.

ஜீவநதி நேர்காணல்கள் என்னும் தலைப்பில் 2011 இல் ஜீவநதியின் இதழ் 1 தொடக்கம் இதழ் 28 வரையில் வெளியான 15 ஆளுமைகளின் நேர்காணல்கள் வெளியாகியிருந்தன. அவற்றில் ஆசிரியரால் மேற்கொள்ளப்பட்ட 11 ஆளுமைகளின் நேர்காணல்கள் இடம்பெற்றுள்ளன. இந்நேர்காணல் தொகுப்பில் ஜீவநதியின் இதழ் 29 தொடக்கம் இதழ் 107 வரையான இதழ்களில் பரணீதரனால் மேற்கொள்ளப்பட்ட 29 நேர்காணல்கள் இணைக்கப்பட்டுள்ளன. இந்நேர்காணல்களில் உள்ளடக்கப்பட்ட ஆளுமைகளின் படைப்பாக்கத் திறன், கலை வெளிப்பாட்டுத் திறன் என்பன வளரும் கலை இலக்கிய ஆர்வலர்களுக்கு நல்லதொரு அனுபவப் பகிர்வாக அமைந்துள்ளன. இத்தொகுப்பில் யோசப் யோன்சன் இராஜ்குமார், கே.எஸ்.ஆனந்தன், வை.விஜயபாஸ்கர், தி.கோபிநாத், கமலாம்பிகை குணராசா, க.சட்டநாதன், க.சின்னராஜன், கு.றஜீபன், கொற்றை பி.கிருஷ்ணானந்தன், டென்மார்க் வி.ஜீவகுமாரன், லெனின் மதிவானம், எம்.கே.முருகானந்தம், புலோலியூர் ஆ.இரத்தினவேலோன், குந்தவை, த.அஜந்தகுமார், இ.சு.முரளிதரன், உமா வரதராஜன், செ.கணேசலிங்கன், க.நவம், கெகிறாவை ஸ{லைஹா, த.ஜெயசீலன், கெகிறாவ ஸஹானா, கே.ஆர்.டேவிட், பேராசிரியர் செ.யோகராசா, நாச்சியாதீவு பர்வீன், ஏ.இக்பால், லெ.முருகபூபதி, இ.இராஜேஸ்கண்ணன், தம்பு சிவா ஆகியோரின் நேர்காணல்கள் இடம்பெற்றுள்ளன. ஜீவநதியின் 92ஆவது வெளியீடாக வெளிவந்திருக்கும் நூல் இது.

ஏனைய பதிவுகள்

100 percent free Antique Ports

Blogs Why Gambling establishment Org Is the most Reliable Destination to Play Thousands Out of Totally free Video game: free spins no deposit online casino