வி.சிவசாமி. வட்டுக்கோட்டை: வி.சிவசாமி, செயலாளர், யாழ்ப்பாண தொல்பொருளியற் கழகம், 1வது பதிப்பு, செப்டெம்பர் 1972. (யாழ்ப்பாணம்: ஈழநாடு அச்சகம்).
14 பக்கம், விலை: குறிப்பிடப்படவில்லை, அளவு: 21.5×14 சமீ.
யாழ்ப்பாணக் கல்லூரி விரிவுரையாளராகப் பணியாற்றிய வேளையில் தொல்பொருளியலும் வரலாறும் என்ற தலைப்பில் எழுதி ஈழநாடு வார மலரில் வெளிவந்த கட்டுரை இது. யாழ்ப்பாணக் கல்லூரியில் 1958 முதல் 1974 வரை ஆசிரியராகப் பணியாற்றிய இவர், இடையில் 1962 முதல் 1965 வரை பேராதனைப் பல்கலைக்கழகத்திலும் விரிவுரையாளராகப் பணியாற்றினார். யாழ்ப்பாணப் பல்கலைக்கழகம் 1974 இல் ஆரம்பிக்கப்பட்ட போது, வி.சிவசாமி அவர்கள் அதன் ஆரம்பகால விரிவுரையாளராகப் பணியில் சேர்ந்தார். சமக்கிருதத்தில் பேராசிரியராகப் பணியாற்றிய சிவசாமி, வரலாறு, இந்து நாகரிகம் ஆகிய பாடங்களையும் கற்பித்தார்.