அ.மா.சாமி. சென்னை 600004: நவமணி பதிப்பகம், 12, 2ஆவது பெருஞ்சாலை, நகர வளர்ச்சிக் குடியிருப்பு, 2வது பதிப்பு, மே 1993, 1வது பதிப்பு, நவம்பர் 1992. (சென்னை: டீ.வீ.ஆர். பதிப்பகம்).
336 பக்கம், படங்கள், விலை: இந்திய ரூபா 45.00, அளவு: 21.5×13.5 சமீ.
நூலாசிரியர் தமிழகத்தின் ‘ராணி’ இதழின் ஆசிரியராகப் பணியாற்றியவர். இந்நூலில் 19ஆம் நூற்றாண்டில் வெளிவந்த இலங்கை இந்திய தமிழ் இதழ்கள் பற்றிய பல தகவல்கள் இடம்பெற்றுள்ளன. பெரும்பான்மையான இதழ்களின் முன்பக்கங்களும் பிரதியெடுத்துப் பதிவுசெய்யப்பட்டுள்ளன. இந்நூல் விளக்கேற்றி வைக்கிறேன், ஒளி பரவட்டும், முதல் இதழ், முதல் நாளிதழ், பட்டியல், விவரம் இல்லாத இதழ்கள், நோக்கும் போக்கும், இதழ்கள் வளர்த்த இன்பத் தமிழ், 20-ஆம் நூற்றாண்டின் தொடக்ககால இதழ்கள், கடைசிச் செய்திகள், சொல்லடைவு ஆகிய இயல்களின் கீழ் எழுதப்பட்டுள்ளது.