இமாம் ஸெய்யித் அலீ காமெனெயி (பார்சி மூலம்), மொகமட் மர்வான் (தமிழாக்கம்). கொழும்பு: விஸ்டம் சொசைட்டி, anjumanehikmat @gmail.com, 1வது பதிப்பு, 2020. (கொழும்பு 10: UDH Compuprint).
112 பக்கம், விலை: ரூபா 300., அளவு: 21×14 சமீ., ISBN: 978-624-95441-5-4.
புத்தக வாசிப்பும் அதன் முக்கியத்துவமும், நானும் புத்தகமும், தற்போதைய நிலை குறித்த விமர்சனம், என்ன செய்யவேண்டும்? ஆகிய நான்கு அத்தியாயங்களில் இந்நூல் எழுதப்பட்டுள்ளது. இந்நூலின் மூலநூலாசிரியர், ஈரானின் இஸ்லாமியக் குடியரசின் அதியுயர் ஆன்மீகத் தலைவராவார். இவர் ஒரு தலைசிறந்த வாசகருமாவார். அவர் இஸ்லாமிய இறையியல், மொழியியல் மற்றும் பிக்ஹ் துறையில் துறைபோகக் கற்றுத் தேர்ந்தவர். தீர்ப்புச் சொல்லும் அதிகாரம் கொண்ட முஜ்தஹித் இவர். அரசியல், அணு விஞ்ஞானம், நனோ தொழில்நுட்பம், நவீன பொருளாதாரம், சர்வதேச விவகாரம், தத்துவஞானம், இலக்கியம், கலை, சட்டம், மொழி, இரராஜதந்திரம் முதலிய பல்வேறு துறைகளில் வெளிப்படுத்தப்படுகின்ற அவரது திறனாய்வும், உரைகளும், எழுத்துகளும் அவரது விசாலமான அறிவுவீச்சைப் புலப்படுத்துகின்றன. (இந்நூல் கொழும்புத் தமிழ்ச் சங்க நூலகத்தில் பார்வையிடப்பட்டது. சேர்க்கை இலக்கம் 71594).