17021 காலம்: சிரித்திரன் சுந்தர் சிறப்பிதழ்.

செல்வம் (இதழாசிரியர்). கனடா: காலம், 16, Hampstead Court, Markam, Ontario L3R 3S7, 1வது பதிப்பு, ஓகஸ்ட் 2004. (இந்தியா: பாவனா பிரின்டர்ஸ், சென்னை 79).

84 பக்கம், புகைப்படங்கள், கருத்தோவியங்கள், விலை: இந்திய ரூபா 25.00, அளவு: 27×20 சமீ.

கனடாவிலிருந்து வெளிவரும் காலம் சஞ்சிகையின் (காலம் இதழ் 22, ஓகஸ்ட் 2004).சிரித்திரன் ஆசிரியர் சிறப்பிதழாக வெளிவந்துள்ள இவ்விதழில் வழமையான இலக்கிய அம்சங்களுடன், சிரித்திரன் சுந்தர் பற்றிய சிறப்புக் கட்டுரைகளாக சிரித்திரனும் சுந்தரும் (செங்கை ஆழியான்), சிரித்திரன்- யாழ்ப்பாணச் சமூகத்தின் கோட்டுச் சித்திரக் குறியீடு (சேரன்), எங்கள் பப்பா-வற்றாத அன்பின் ஊற்று (திருமதி கோகிலம் சிவஞானசுந்தரம்), மனிதருள் ஒரு மாமனிதர் (ராதேயன்), சிந்தனை ஆற்றல் மிகு சிரித்திரன் ஆசிரியர் (அகளங்கன்) ஆகிய ஆக்கங்களும் இடம்பெற்றுள்ளன.

ஏனைய பதிவுகள்

16879 வைத்தீசுவரர் மலர்.

தி.விசுவலிங்கம் (தொகுப்பாசிரியர்). கனடா: சைவ சித்தாந்த மன்றம், 1008-50 Elm Drive East, Mississauga, Ontario, L5A 3X2, 1வது பதிப்பு, செப்டெம்பர் 2001. (கனடா: பாரதி பதிப்பகம்). (4), 68 பக்கம், புகைப்படத்