17062 கொழும்புத் தமிழ்ச்சங்கம்: 67ஆவது ஆண்டு அறிக்கை (2008-2009).

கொழும்புத் தமிழ்ச் சங்க ஆட்சிக்குழு. கொழும்பு 6: சங்கப் பணிமனை, கொழும்புத் தமிழ்ச் சங்கம், இல. 7, 57ஆவது ஒழுங்கை, வெள்ளவத்தை, 1வது பதிப்பு, 2009. (அச்சக விபரம் தரப்படவில்லை).

38 பக்கம், விலை: குறிப்பிடப்படவில்லை, அளவு: 21.5×14.5 சமீ.

1942ம் ஆண்டு மார்ச் மாதம் 22ம் திகதி ஆரம்பிக்கப்பட்ட கொழும்புத் தமிழர் முன்னேற்றக் கழகம், 1945இல் கொழும்புத் தமிழ்ச் சங்கம் எனப் பெயர் பெற்றது. இச்சங்கத்தின் 2008-2009 ஆண்டுக் காலகட்டத்துக்குரிய 67ஆம் ஆண்டறிக்கை நூலுருவில் பிரசுரிக்கப்பட்டுள்ளது. இதில் 2008ஆம் ஆண்டு செப்டெம்பர் 1ஆம் திகதி முதல் 2009 ஆம் ஆண்டு செப்டெம்பர் 13ஆம் திகதி; வரை கொழும்புத் தமிழ்ச் சங்கம் ஆற்றிய பணிகளை பதிவுசெய்துள்ளனர். இவ்வாண்டுக் காலகட்டத்தில் மேற்படி சங்கத்தின் ஆயுள்கால உறுப்பினர்கள் 514 பேரும் சாதாரண உறுப்பினர் 154 பேருமாக மொத்தம் 668 பேர் இணைந்திருந்தனர். இக்காலகட்டத்தில் பொதுச் செயலாளராக திரு. ஆழ்வாப்பிள்ளை கந்தசாமி சேவையாற்றியிருந்தார். (இந்நூல் நூலகம் நிறுவன இணையத்தள நூலகத்தில் பார்வையிடப்பட்டது. சேர்க்கை இலக்கம் 4562).

ஏனைய பதிவுகள்

15311 வெடியரசன் மற்றும் பண்டாரவன்னியன் நாட்டுக் கூத்துகள்.

மு.அருட்பிரகாசம். யாழ்ப்பாணம்: பண்பாட்டலுவல்கள் திணைக்களம், கல்வி, பண்பாட்டலுவல்கள், விளையாட்டுத்துறை மற்றும் இளைஞர் விவகார அமைச்சு, வடக்கு மாகாணம், செம்மணி வீதி, நல்லூர், 1வது பதிப்பு, 2020. (யாழ்ப்பாணம்: நியூ எவகிறீன் அச்சகம், இல. 693,

New york Casino Commission Rates

Posts Free to Gamble Netent Slots Online game With this Ability Reel Ports And you may Modern Jackpots Are Totally free Slots Playable To the