இயற்கை, உயிர், வாழ்க்கை, சுதந்திரம் – கட்டுரைத் தொகுப்பு. எஸ்.ரி.நாதன் (இயற்பெயர்: செல்லத்துரை தவநாதன்). கனடா: செல்லத்துரை தவநாதன், Serving Tamils Organisation (STO), ஒன்ராரியோ, 1வது பதிப்பு, டிசம்பர் 2013. (கனடா: செல்வா கிராப்பிக்ஸ், ஒன்ராரியோ).
258 பக்கம், 6 தகடுகள், ஒளிப்படங்கள், விலை: குறிப்பிடப்படவில்லை, அளவு: 21×13.5 சமீ., ISBN: 978-0-9936539-0-2.
இயற்கையின் ஏற்பாடுகள், இயற்கை படைப்பா? வெடிப்பா?, வெடிப்பா?, அணுவின் மாதிரியே அண்டம், உயிர் ஓட்டம், உயிரின உச்சம், மனிதனுக்கு அடுத்தது யார்?, மனித வாழ்வின் வேடிக்கைகள், மனித பேதங்கள், பாலியல் வன்முறைகளும் சமுதாயச் சீரழிவுகளும், உலக அழிவு சாத்தியமா? மனித இனம் முற்றாக அழிந்துபோவது சாத்தியமா?, மாதிரி மனித உலகம், எதிர்கால ஆண்டு மனிதர்கள், அம்மா அப்பா இல்லாத அனாதைகள் அற்ற மனிதர்கள், சுதந்திரமானது எது?, மனிதன் தேடும் சுதந்திரம், மனித இனத்தின் போராட்டங்கள், விடுதலைப் போராட்டங்கள், மூன்றாவது போராட்டம், முடிவில்லாத முடிவுகள் ஆகிய 21 அத்தியாயங்களில் இந்நூல் எழுதப்பட்டுள்ளது. ரொறன்ரோ (கனடா)வில் வாழும் இந்நூலாசிரியர் ‘தேன் மொழி’, ‘தமிழோசை’ ஆகிய வானொலிகளில் பல நிகழ்ச்சிகள வழங்கிப் பிரபல்யமானவர். ‘தேன்மொழி’ என்ற பெயரில் ஒரு வாரப் பத்திரிகையையும் சில காலம் நடத்தி வந்தவர்.