17177 பள்ளிக்கூடங்கள் கட்டடக் கூடுகள் அல்ல.

தீபச்செல்வன்; (இயற்பெயர்: பாலேந்திரன் பிரதீபன்). பருத்தித்துறை: ஜீவநதி வெளியீடு, கலையகம், சாமணந்தறை ஆலடிப் பிள்ளையார் வீதி, அல்வாய் வடமேற்கு, அல்வாய், 1வது பதிப்பு, மாசி 2023. (பருத்தித்துறை: பரணீ அச்சகம், நெல்லியடி).

viii, 72 பக்கம், விலை: ரூபா 300., அளவு: 21.5×14.5 சமீ., ISBN: 978-624-5881-85-7.

டாக்டர் பரமநாதன் விக்கினேஸ்வரா அவர்களின் மறைவின் முதலாவது ஆண்டு நினைவுநாளை முன்னிட்டு இந்நூல் வெளியிடப்பட்டுள்ளது. கிளிநொச்சியைப் பிறப்பிடமாகக் கொண்ட தீபச்செல்வன், கிளிநொச்சி மத்திய கல்லூரியில் பாடசாலைக் கல்வியையும் யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தில் தமிழ் சிறப்புக் கலைமாணிப் பட்டத்தையும் பெற்றவர். சென்னைப் பல்கலைக்கழகத்தில் இதழியல் மற்றும் தொடர்பியல் துறையில் முதுகலைப் பட்டம் பெற்றதுடன், திருநெல்வேலி மனோனமணியம் சுந்தரனார் பல்கலைக்கழகத்தில் ஆய்வியல் நிறைஞர் பட்டப் படிப்பையும் நிறைவுசெய்தவர். தற்போது இலங்கைக் கல்வித்துறையில் இணைந்து ஆசிரியராகப் பணியாற்றி வருகிறார். இந்நூலில் வடக்கு கிழக்கு கல்வி வீழ்ச்சிக்கு யார் பொறுப்பு?, நிழற் போர், போர் தின்ற தேசத்தை உயிரூட்டும் பெண்கள், பிறசர் கிளினிக் சென்ற பதினொரு வயதுச் சிறுமி, பள்ளிக்கூடங்கள் கட்டடங்களால் மாத்திரம் ஆனவையல்ல, சாட்சிகளாக ஈழக் கைம்பெண்கள், கல்வித்துறை யாருடைய கைகளில், பண்பாட்டை மறந்த இனம் பூமியில் நிலைத்ததில்லை, நிலம் விட்டுப் பெயர்தல், தாய் நிலத்தில் இருந்து பிடுங்கி எறியப்படுகிறோம், கொழும்பில் ஏற்றப்பட்ட ஒளி, இலங்கையை ஏன் துன்பம் சூழ்கிறது?, உலகைத் துண்டாடும் கொரோனா, சொந்த மண்ணிலும் அகதியாய் நிற்கும் வாழுமினம், பின்னிணைப்பு ஆகிய 15 தலைப்புகளிலான சமுகவியல்சார்ந்த ஆக்கங்கள் இந்நூலில் இடம்பெற்றுள்ளன. இது ஜீவநதி வெளியீட்டகத்தின் 261ஆவது நூலாக வெளிவந்துள்ளது.

ஏனைய பதிவுகள்

Shell out From the Mobile Casinos 2024

Content Almost every other Banking Options What are Airtime Online casinos? What’s Mobile Charging you Gambling enterprise And how Does it Work? Just how Our

14676 அசை: சிறுகதைத் தொகுப்பு.

க.கோபாலபிள்ளை. கொழும்பு 10: எஸ்.கொடகே சகோதரர்கள், 661/663/675 பி.டி.எஸ்.குலரத்ன மாவத்தை, மருதானை வீதி, 1வது பதிப்பு, ஜுலை 2019. (வெல்லம்பிட்டிய: சத்துர அச்சகம், 69, குமாரதாச பிளேஸ்). (8), 9-176 பக்கம், விலை: ரூபா