என்.சண்முகரத்தினம். லண்டன்: சமூகம் இயல் பதிப்பகம், 317, பெருந்தெரு வடக்கு, ஈஸ்ட்ஹாம், 3வது பதிப்பு, மார்ச் 2023, 1வது பதிப்பு, 1983, 2வது பதிப்பு, 1984. (சென்னை 600 077: மணி ஆப்செட்).
86 பக்கம், விலை: ரூபா 600., இந்திய ரூபா 140., அளவு: 21.5×14 சமீ., ISBN: 978-624-6337-03-2.
சிங்கள இனவாதத்தின் தோற்றம், உள்ளடக்கம், வளர்ச்சி, அதன்அதிகார மேல்நிலை பற்றிய விரிவான ஆய்வை இத் தொகுதி பிரதான உள்ளடக்கமாகக் கொண்டிருந்தாலும், இந்நூலின் மற்றொரு அடிப்படை, இலங்கையின் தேசிய இனப்பிரச்சினையேயாகும். இலங்கை இனப்பிரச்சினை விவகாரத்தில் பல்வேறு பார்வைகள் உள்ளன. இதில் மூன்று பிரதான பார்வைகளாக சிங்களத் தேசியவாதப் பார்வை, தமிழ்த் தேசியப் பார்வை, பாரம்பரிய இடதுசாரி நிலைப்பட்ட பார்வை என்பன அமைகின்றன. இலங்கைப் பிரச்சினையில், இந்த மூன்று பார்வைகளையும் தாண்டிப் புதியதொரு பார்வையையும், அணுகுமுறையையும் இந்த நூலின் உள்ளடக்கம் நம்முன் வைத்து உரையாடுகின்றது. இனப் பிரச்சினை விவகாரத்தில் சிங்கள தமிழ் தேசியவாதப் பார்வைகளை கேள்விக்குட்படுத்துகின்ற இந்த எழுத்துகள், இலங்கையின் பாரம்பரிய இடதுசாரிகளின் நிலைப்பாட்டையும் மறுபரிசீலனை செய்யக் கோருகின்றது. (இந்நூல் கொழும்புத் தமிழ்ச் சங்க நூலகத்தில் பார்வையிடப்பட்டது. சேர்க்கை இலக்கம் 71431).