ஜின்னாஹ் ஷரிபுத்தீன். கொழும்பு 6: Room to Read Sri Lanka, 14, 36ஆவது ஒழுங்கை, 2வது பதிப்பு, 2010, 1வது பதிப்பு, 2008. (மஹரகம: தரஞ்ஜீ பிரின்டர்ஸ், 506, ஹைலெவல் வீதி, நாவின்ன). 20 பக்கம், சித்திரங்கள், விலை: குறிப்பிடப்படவில்லை, அளவு: 21×29.5 சமீ., ISBN: 978-955-1520-19-9. குமாரி என்ற சிறுமி பாடசாலை விட்டு வீடு திரும்பிவரும் வழியில் மந்திரக் கோலொன்றினைக் கண்டெடுத்தாள். அவள் ஏதாவதொன்றினைச் சொல்லியபடி தட்டினால் அது உடனே அவள்முன் தோன்றியது. பசிக்கிறது உணவு வேண்டுமென்றாள். மேசைக்கு உணவு வந்தது. பூ வேண்டுமென்றாள். புத்தகம் வேண்டுமென்றாள். அனைத்தும் கிடைத்தன. சக்தி வாய்ந்த அந்த மந்திரக்கோலை வைத்துக்கொண்டு குமாரி அம்மாவுக்காகக் காத்திருந்தாள். வீட்டுக்கு வந்த அம்மா குமாரி கூறிய எதனையும் காதில் போட்டுக்கொள்ளவேயில்லை. அதுபற்றி மீண்டும் மீண்டும் குமாரி கூறியபோதுகூட அம்மா குமாரியை ஏசினாரே தவிர, அவளை நம்ப மறுத்தார். கவலையடைந்த குமாரி, அம்மாவை நம்ப வைப்பதற்கு மந்திரக் கோலினைப் பிரயோகித்தாள். அம்மாவை எலியாக்கினாள். என்ன கொடுமை. அவளுடைய செல்லப் பூனை எலியைத் துரத்திப் பிடித்துக்கொண்டு தின்னவும் தயாரானது. அச்சமடைந்த குமாரி, அழுகையுடன் ஓடியோடி எலியை மீண்டும் அம்மாவாக்கப் போராடினாள். பூனையும் தன் பிடியை விடாமல் அம்மா எலியைத் தூக்கிக்கொண்டு ஒடியது. குமாரியால் அம்மாவைக் காப்பாற்ற முடிந்ததா இல்லையா என்பதை இக்கதை சுவாரஸ்யமாகச் சொல்கின்றது. அருண கீர்த்தி கமகேயின் ஓவியங்கள் கதைக்கு உயிரூட்டுகின்றன.