17265 கல்விப் பணியில் சவால்களும் சாதனைகளும்.

எம்.எல்.எம்.இஸ்மாயில். பருத்தித்துறை: ஜீவநதி வெளியீடு, கலையகம், சாமணந்தறை ஆலடிப் பிள்ளையார் வீதி, அல்வாய் வடமேற்கு, அல்வாய், 1வது பதிப்பு, 2025. (பருத்தித்துறை: பரணீ அச்சகம், நெல்லியடி).

120 பக்கம், விலை: ரூபா 750.00, அளவு: 21.5×14.5 சமீ., ISBN: 978-624-6601-62-1.

குருநாகல் மாவட்டத்தில் குளியாப்பிட்டி தேர்தல் தொகுதியில் அறக்யால என்னும் கிராமத்தில் 1946ஆம் ஆண்டு டிசம்பர் 13ஆம் திகதியில் பிறந்தவர் ஓமர் லெப்பே விதானை முகம்மது லெப்பே இஸ்மாயில். மாணவ ஆசிரியர் போட்டிப் பரீட்சையில் 1968இல் தேர்ச்சி பெற்று ஆசிரிய சேவையில் இணைந்து பட்டதாரி ஆசிரியராகி, 41 ஆண்டுகள் சிறந்த பணியாற்றி பின்னாளில் ஓய்வுபெற்ற அதிபராகி இந்நூலை தனது அனுபவப் பிழிவாக எழுதியுள்ளார். அவரது முக்கிய செயற்பாடுகளாக பௌதிக, மனித வளங்கள் இல்லாத இரண்டு பாடசாலைகளை பொறுப்பேற்று அவற்றை புகழ்பூத்த பாடசாலைகளாக உருவாக்கிய சாதனையை இந்நூல்வழி அறியமுடிகின்றது. இது ஜீவநதி வெளியீட்டகத்தின் 432ஆவது நூலாக வெளிவந்துள்ளது.

ஏனைய பதிவுகள்

Tragamonedas 3d De balde Sobre 2024

Content Esta publicación – Clásicas Tragamonedas Bonos Durante Tragamonedas Gratuito Wild Panda Sobre la Tragamonedas Regalado Buffalo Tragamonedas De Iphone 2024: Sin cargo O Con