17286 நுணசை ஆரம் 2017.

சி.நாகலிங்கம் (இதழாசிரியர்). யாழ்ப்பாணம்: கைதடி-நுணாவில் அரசாங்க தமிழ் கலவன் பாடசாலை, 1வது பதிப்பு, 2017. (யாழ்ப்பாணம்: ஸ்ரீ மாருதி பிரிண்டேர்ஸ், இல. 555, நாவலர் வீதி).

(8), 154 பக்கம், விலை: குறிப்பிடப்படவில்லை, அளவு: 24.5×17 சமீ.

ஆசிச் செய்தி, வாழ்த்துச் செய்திகளுடன் நான் கண்ட நல்ல மனிதன், அனுபவப் பகிர்வு, அதிபரின் அகத்திலிருந்து, இதழாசிரியரின் இதயத்திலிருந்து, பாடசாலைத் தகவல்கள், பாடசாலை வரலாறு, சிறப்புப் பகுதி, மாணவர் பகுதி, பரீட்சைப் பெறுபேறுகள், சாதனையாளர்கள், நன்றியுரை ஆகிய அம்சங்கள் இம்மலரில் இடம்பெற்றுள்ளன. மலர்க்குழுவின் தலைவராக திரு. ஆ.தங்கவேலு, இதழாசிரியராக திருமதி சி.நாகலிங்கம், துணை ஆசிரியராக திருமதி ஜெ.விநாயகமூர்த்தி ஆகியோரும் உறுப்பினர்களாக திருமதி ஜெ.பரம்சோதி, திருமதி ந.சர்மிலன், செல்வி செ.கானப்பிரியா, திருமதி ச.நிமலரங்கன், திருமதி க.உதயசந்தர், திருமதி த.பஞ்சலிங்கம் ஆகியோர் பணியாற்றியுள்ளனர்.

ஏனைய பதிவுகள்

14639 பூகம்பப் பூக்கள்(கவிதைத் தொகுப்பு).

ச.வே.பஞ்சாட்சரம். கிளிநொச்சி: சி.மகேந்திரன், நிர்வாகி, ஆதவன் கல்வி நிலையம், இல. 65, ஸ்கந்தபுரம், 1வது பதிப்பு, சித்திரை 2000. (கிளிநொச்சி: கன்னிநிலம் பதிப்பகம், ஸ்கந்தபுரம்). x, 26 பக்கம், விலை: ரூபா 40.00, அளவு:

14099 வீரகத்தி விநாயகரும் கொல்லங்கலட்டிக் கிராமமும்.

அன்னபரிபூரணம் ஞானேஸ்வரன் (மலராசிரியர்). மாவிட்டபுரம்: வீரகத்தி விநாயகர் ஆலயத் தொண்டர்கள், கொல்லங்கலட்டி, 1வது பதிப்பு, 2017. (மல்லாகம்: ராம் பதிப்பகம், காங்கேசன்துறை வீதி). 81 பக்கம், புகைப்படங்கள், தகடுகள், விலை: குறிப்பிடப்படவில்லை, அளவு: 24.5×17.5