உடுவை எஸ்.தில்லை நடராஜா. கொழும்பு 4: இந்து சமய அறநெறிக் கல்விப் பிரிவு, இந்து சமய கலாசார அலுவல்கள் திணைக்களம், சிறைச்சாலைகள் மறுசீரமைப்பு, புனர்வாழ்வளிப்பு மீள்குடியேற்றம் மற்றும் இந்துமத அலுவல்கள் அமைச்சு, 248, 1/1 காலி வீதி, 1வது பதிப்பு, 2017. (கொழும்பு 6: விகடன் அச்சகம், 541/2C, காலி வீதி). 71 பக்கம், புகைப்படங்கள், விலை: குறிப்பிடப்படவில்லை, அளவு: 29.5×21 சமீ., ISBN: 978-955-9233-52-7. இயல், இசை, நாடகம் என முத்தமிழிலும் வித்தகராக, தமிழ் மொழியோடு ஆங்கிலம், சமஸ்கிருதம், சிங்களம், லத்தீன் எனப் பல மொழிகளிலும் பாண்டித்தியம் பெற்றவராக மதுரைத் தமிழ்ப் பண்டிதராக இந்தியாவிலும் இலங்கையிலும் பல்கலைக்கழக தமிழ்த்துறைப் பேராசிரியராக நியமனம் பெற்ற பெருமைக்குரியவர் சுவாமி விபுலாநந்தர். சிறுவர்களுக்கேற்ற வகையில் எளிமையான தமிழில் இப்பெரியாரைப் பற்றி இந்நூல் கூறுகின்றது. சுவாமி விபுலாநந்த அடிகளாரின் பிறப்பு, சுவாமி விபுலாநந்த அடிகளாரின் ஆரம்ப நாட்கள், சுவாமி விபுலாநந்த அடிகளாரின் கல்விச் சிந்தனைகளும் கல்விப் பணிகளும், சுவாமி விபுலாநந்த அடிகளாரின் பன்மொழி ஆற்றல்கள் மற்றும் பல்துறை ஆளுமைகள், சுவாமி விபுலாநந்த அடிகளாரின் தமிழ்ப் பணிகள், சுவாமி விபுலாநந்த அடிகளாரின் சமூகப் பணிகள் மற்றும் சமயப் பணிகள், சுவாமி விபுலாநந்த அடிகளாரின் கலை இலக்கியப் பணிகள், சுவாமி விபுலாநந்த அடிகளாரின் எழுத்தாக்கங்கள், சுவாமி விபுலாநந்த அடிகளாரின் வாழ்வில் தமிழிசை மற்றும் தமிழிசைக் கருவிகள், சுவாமி விபுலாநந்த அடிகளாரின் மதங்க சூளாமணி, சுவாமி விபுலாநந்த அடிகளாரின் யாழ்நூல், சுவாமி விபுலாநந்த அடிகளார் தொடர்பான தகவல்கள் சில, சுவாமி விபுலாநந்த அடிகளார் நினைவு நிகழ்வுகள் சில ஆகிய 13 இயல்களில் இந்நூல் எழுதப்பட்டுள்ளது.