தெ.மதுசூதனன் (மலராசிரியர்). கொழும்பு 6: கொழும்புத் தமிழ்ச்சங்கம், இல. 7, சங்கம் ஒழுங்கை, வெள்ளவத்தை, 1வது பதிப்பு, 2019. (அச்சக விபரம் தரப்படவில்லை).
100 பக்கம், விலை: ரூபா 300.00, அளவு: 24.5×18 சமீ.
கொழும்புத் தமிழ்ச் சங்கம் 2019இல் தமிழிசை தொடர்பான ஆய்வரங்கையும் இசை அளிக்கைகளையும் மாணவர்களுக்கான தமிழிசைப் போட்டிகளையும் வெகு சிறப்பாக முன்னெடுத்திருந்தது. இவ்வேளையில் இச்சிறப்பு மலரும் வெளியிடப்பட்டது. இம்மலர்க் குழுவில் ஆழ்வாப்பிள்ளை கந்தசாமி, கே.பொன்னுத்துரை, திருமதி இராஜேஸ்வரி ஜெகானந்தகுரு, திருமதி சுகந்தி இராஜகுலேந்திரா, மு.சி.ஸ்ரீதயாளன் ஆகியோர் இடம்பெற்றுள்ளனர். இச்சிறப்பு மலரில் தமிழிசை இயக்கமும் தமிழ்த் தேசியமும் (சபா.ஜெயராசா), குறைந்துவரும் யாழ்ப்பாணத்து இசை ரசனை (தவமைந்தன் தவநாதன் றொபேட்), தொல்காப்பிய நூன்மரபில் இன்றைய இசையியற் கூறுகள் (அரிமளம் க.பத்மநாபன்), சங்க இலக்கியம் காட்டும் தமிழ் இசை வரலாறு (நா.மம்முது), இடைக்கால இசை (எம்.எம்.தண்டபாணி தேசிகர்), தமிழர் வளர்த்த ஆடலிசை மரபு (ஞானா குலேந்திரன்), தமிழிசைப் பண்பு (எஸ்.கே.சிவபாலன்), தமிழிசை மும்மூர்த்திகளும் சங்கீத மும்மூர்த்திகளும் (இ.அங்கையற்கண்ணி), பாபநாசம் சிவன் கீர்த்தனைகளும் தமிழிசையும் (சாரதா நம்பிஆரூரன்), நாட்டுப்புற இசைத் தன்மையும் வகையும் (கே.ஏ.குணசேகரன்), தமிழரின் வில்லிசை மரபு (கௌசல்யா சுப்பிரமணியன்) ஆகிய ஆய்வுக்கட்டுரைகள் இடம்பெற்றுள்ளன.