மணியம்பிள்ளை (இயற்பெயர்: கந்தசாமி சுப்பிரமணியம்). கனடா: கந்தசாமி சுப்பிரமணியம், 1வது பதிப்பு, ஜுன் 2013. (கனடா: Urban Print).
xxviii, 202 பக்கம், விலை: குறிப்பிடப்படவில்லை, அளவு: 22×15 சமீ.
மணியம்பிள்ளையின் கவிதைகளில், இலக்கிய வரலாற்றுக் காலத்தினூடாக வழக்கிலிருந்த சொற்கள் மாத்திரமன்றி இலக்கண கால மக்கள் வாழ்ந்த தடயங்களையும் காணமுடிகின்றது. நெடுந்தீவு மக்களின் இயற்கையோடு இயைந்த வாழ்வில் இலக்கியங்களும் பட்டப் பெயர்களும் பரந்து கிடக்கின்றன. இவையே இத்தீவின் பழம்பெருமையை பறைசாற்றி நிற்பவை. மயிலர்(பசு), உவளர் (மண்), புளியடியார் (மரம்) என்ற பாரம்பரியப் பதிவுகள்கூட இம்மண்ணின் கவித்துவப் பாரம்பரியத்திற்கு வலுச்சேர்க்கும் சொத்தாக அமைகின்றன. இம்மண்ணின் இலக்கிய வரலாற்றுக்கு அடிப்படையான அதன் பயன்பாடு இவரது கவிதைகளிலும் இடம்பெற்றுள்ளது. வளமான காலம் முதல் வன்னியின் அவலம் வரை இவரது கவிதைகள் வளர்ந்து செல்கின்றன.